Advertisment

தமிழகம் வரும் மோடி-தொகுதிப் பங்கீட்டில் தீவிரம் காட்டும் என்டிஏ

1006

admk Photograph: (politics)

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள், கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி, அதேபோல் அ.தி.மு.க. - பா.ஜ.க அடங்கிய கூட்டணி தேர்தலில் களம் காண்கின்றன. சீமானின் நாம் தமிழர் கட்சி, கடந்த தேர்தல்களைப் போலவே 234 தொகுதிகளிலும் கூட்டணி வைக்காமல் தனித்தே போட்டியிடுகிறது.  அதேபோல் விஜய்யின் த.வெ.க.கவும் தனித்துப் போட்டியிட உள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisment

இந்நிலையில் பிரதமர் மோடி இன்று (28/02/2026) இரவு சென்னைக்கு வருகை தர உள்ளார். இன்று இரவு ஆளுநர் மாளிகையில் தங்கி ஓய்வெடுக்கிறார். அதற்கு அடுத்த நாள் அதாவது மார்ச் 1ஆம் தேதி (01.03.2026 - ஞாயிற்றுக்கிழமை) புதுச்சேரியில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். இந்த கூட்டத்திற்குப் பின்னர் அங்கிருந்து கிளம்பி மதுரையில் உள்ள திருப்பரங்குன்றத்திற்கு சென்று சாமி தரிசனம் செய்ய உள்ளார். அதன்படி இங்குத் தரிசனம் செய்துவிட்டு மதுரை கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். மோடியின் தமிழக வருகை காரணமாக மதுரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

Advertisment

பிரதமர் மோடி தமிழகம் வரும் நிலையில் என்டிஏ கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை என்பது தீவிர கட்டத்தை எட்டியுள்ளது. பிரதமர் மோடி தமிழகம் வரும் அதே வேளையில் பாஜகவின் தேர்தல் மேலிடப்பொறுப்பாளர் பியூஸ் கோயலும் இன்று மதுரை வரவுள்ளார். தனியார் ஹோட்டலில் தங்கும் அவரை அதிமுக தலைமை நிலையச் செயலாளர் எஸ்.பி.வேலுமணி சந்தித்து முதல் கட்டமாக பாஜக-அதிமுக இடையான தொகுதிப் பங்கீடு குறித்து பேச இருப்பதாக கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து அக்கூட்டணியில் இடம்பெற்றுள்ள மற்ற கட்சிகள், குறிப்பாக டிடிவி தினகரனின் அமமுக, அன்புமணியின் பாமக உள்ள கட்சிகள் தொகுதிப் பங்கீடு குறித்து பியூஸ் கோயலிடம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. பேச்சுவார்த்தைக்குப் பின்னரே டி.டி.வி.தினகரனின் கட்சிக்கு எத்தனை தொகுதிகள், என்னென்ன தொகுதிகள் என்பது தெரியவரும் என்று கூறப்படுகிறது. முன்னதாக செய்தியாளர் சந்திப்பில் ''எங்களுக்கு வேண்டிய தொகுதிகளை பெற பாஜகவுடன் தான் பேச்சுவார்த்தை நடத்துவோம்'' என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்திருந்த நிலையில் பாஜகவுடன் நேரடியாக டி.டி.வி.தினகரன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

modi ammk ttv dinakaran nda alliance
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe