உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களால் வருடந்தோறும் பொங்கல் திருநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் ஜனவரி மாதம் 14ஆம் தேதி போகி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அதற்கு அடுத்த நாளான 15ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அடுத்தடுத்த நாள் (ஜனவரி 16) மாட்டுப் பொங்கல், அதனைத் தொடர்ந்து ஜனவரி 17ஆம் தேதி காணும் பொங்கல் கொண்டாடப்பட உள்ளது. பல்வேறு அரசியல் தலைவர்களும் பொங்கல் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் டெல்லியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வீட்டு பொங்கல் விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் தமிழக பாஜகவை சேர்ந்த நயினார் நாகேந்திரன், தமிழிசை, வானதி ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதேபோல் நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவி மோகன், ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் பிரதமர் மோடி பேசுகையில், ''அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள். பொங்கல் பண்டிகை பல்வேறு மாநிலங்களில் பல்வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது. வேளாண்குடியினர் அறுவடையை கொண்டாடும் நாள் பொங்கல். கங்கை கொண்ட சோழபுரத்தில் வழிபட்டதை இந்த நேரத்தில் நினைவு கூறுகிறேன். திருக்குறளில் கூட விவசாயத்தின் பெருமையை உணர்த்தும் பாடல்கள் உள்ளது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த தொடர்ந்து மத்திய அரசு உழைத்து வருகிறது. நமது பூமி நலமுடன் இருக்க வேண்டும். அதே நேரத்தில் அறுவடையும் இருக்க வேண்டும்''என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/14/638-2026-01-14-11-09-40.jpg)