முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நடத்தி வந்த அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக இருந்த வைத்திலிங்கம் இன்று (21.01.2026) காலை திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. அதாவது அடுத்த கட்டமாக தனது அரசியல் நகர்வாக வைத்திலிங்கம் திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக பதவி வகித்து வரும் வைத்திலிங்கம் அதிமுகவின் முக்கிய பிரபல பிரமுகராகவும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய நபராக வலம் வந்தவர். கடந்த 2022 இல் அதிமுக ஒற்றைத் தலைமை தொடர்பான பிரச்சனை எழுந்த போது ஓ.பி.எஸ். ஆதரவாளராக இருந்தார். அதன்பின்னர் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு இணை ஓருங்கிணைப்பாளராக செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவுவிடம் வைத்திலிங்கம் கொடுத்த நிலையில் திமுகவில் இணைய திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் வந்துள்ளார். அவரை செந்தில் பாலாஜி உள்ளே அழைத்து சென்ற நிலையில் சிறிது நேரத்தில் திமுகவில் இணையவுள்ளார். அண்மையில் மனோஜ் பாண்டியன், மருது அழகுராஜ் ஆகியோர் திமுகவில் இணைந்த நிலையில் தஞ்சையின் அதிமுக முகமாக இருந்த வைத்திலிங்கம் திமுகவில் இணைவது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/21/720-2026-01-21-09-59-01.jpg)