Advertisment

அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர், ஊழியர் கூட்டமைப்பு போராட்டம்;  எம்.எல்.ஏ பங்கேற்று ஆதரவு!

fed

MLA participates and supports at struggle Annamalai University Teachers' and Employees' Federation

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர், ஊழியர் மற்றும் ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் இன்று (27-02-26) 3-ம் நாளாக காலவரையற்ற உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது.

Advertisment

பல்கலைக்கழக ஆசிரியர், ஊழியர்களுக்கான, பதவி உயர்வுகள் மற்றும் பணப்பயன்கள் மற்றும் 7வது ஊதியக்குழு நிலுவைத் தொகையினை உடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பேராசிரியர்கள், ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் ஆசிரியர், ஊழியர் மற்றும் ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சி. சுப்பிரமணியன் தலைமை வகித்தார். இணை ஒருங்கிணைப்பாளர்கள் ஆ.ரவி, பேராசிரியர் இளங்கோ, மதியழகன்,கபில்தேவ், துணை ஒருங்கிணைப்பாளர் மனோகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஊழியர்கள் ஓய்வூதியர்கள் கலந்து கொண்டு கோரிக்கை முழக்கங்களை எழுப்பினார்கள்.

Advertisment

அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஊழியர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கடலூர் கிழக்கு  மாவட்ட அதிமுக செயலாளரும், சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.பாண்டியன் ஆதரவு தெரிவித்து பேசுகையில், ‘1920 ஆண்டு மீனாட்சி கல்லூரியாக துவங்க பெற்று 1929 ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழககமாக மாறி இன்று தென் இந்தியாவின் மிகப்பெரிய பல்கலைக்கழகமாக தமிழ்நாட்டின் அடையாளமாக இப்பல்கலைக்கழகம் விளங்கி வருகின்றது. பல அறிஞர் பெருமக்களை உலகிற்கு அடையாளம் காட்டிய பெருமை அண்னாமலைப் பல்கலைக்கழகத்தினை சாறும். கடலூர் மாவட்டத்தில் அந்நாளில் ஏழை எளிய மக்களின் கல்வி கனவு என்பது எட்டா கணியாக இருந்தது. ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் கல்வி கனவினை நினைவாக்கி தந்தது இப்பல்கலைக்கழகம். 

தனியார் நிர்வாகத்தின் கீழ் இருந்த போது கடந்த 2012 ஆண்டு ஏற்பட்ட நிதி சிக்கலில் அன்றைக்கு பணியில் இருந்த சுமார் 10,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள்,50 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தினை அரசே ஏற்று நடத்தும் என்று அறிவித்து 2013 ஆண்டு அதை நடைமுறைப்படுத்தினார். அதன் பின் வந்த திமுக அரசு பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்கள் பிரச்சணையில் சரியான நடவடிக்கை எடுக்காததால்  பெரிய போராட்டமாக மாறியுள்ளது. போராட்டத்தால் ஆசிரியர்கள் பாடம் நடத்த செல்லவில்லை. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. எனவே அரசு ஆசிரியர்கள் ஊழியர்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று பேசினார்.  

Chidambaram Annamalai University
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe