Advertisment

வீடு வீடாக சென்று பிரச்சாரத்தை துவக்கிய எம்எல்ஏ!

804

MLA launches door-to-door campaign! Photograph: (admk)

சிதம்பரம் சட்டமன்றத் தொகுதி குமராட்சி ஊராட்சி ஒன்றியம், ஜெயங்கொண்டபட்டினம் ஊராட்சியில் தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய துண்டுப் பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சிக்கு அதிமுக ஒன்றிய கழக செயலாளர் வை.சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் சிவபுரி ரவி, ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் பு.தா.செங்குட்டுவன் ஒன்றிய பொருளாளர் சுந்தரம், மாவட்ட பிரதிநிதி மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பாசறைச் செயலாளர் துணை செயலாளர் குணசேகரன் வரவேற்றார்.

Advertisment

சிறப்பு அழைப்பாளராக கடலூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.பாண்டியன் கலந்து கொண்டு வீடு வீடாக துண்டுப் பிரசுரங்களை வழங்கி பொதுமக்கள் மத்தியில் பேசுகையில், ''2011 ஆண்டுஜெயலலிதா தலைமையில் கழக ஆட்சி அமைந்தவுடன் அனைவருக்கும் மிக்ஸி, கிரைண்டர் மற்றும் மின்விசிறி வழங்கப்பட்டது. அதேபோல் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கினார். அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் விலையில்லா அரிசி, தாலிக்கு தங்கம் என்று எண்ணற்ற திட்டங்களை தந்தார். அதேபோல் எடப்பாடியார் அவர்கள் கழக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்தினார். அதிலும் குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ஆடு, மாடு, கோழி வழங்கினார். மேலும் குடிமராமத்து பணிகளால் ஏரி குளங்களை ஆழப்படுத்தி நீர் ஆதாரங்களை பெருக்கினார். ஆட்சிக்கு வந்த தி.மு.க அரசு மக்கள் நல திட்டங்களை மறந்து குடும்ப நலத்திற்கான திட்டங்களை மட்டுமே செயல்படுத்தி வந்தது.

Advertisment

தி.மு.க அரசு கழக ஆட்சியில் கொண்டு வந்த எண்ணற்ற திட்டங்ளை முடக்கி வைத்துள்ளது. அதிலும் குறிப்பாக கிராமப்புறங்களில் சுமார் 2000 மினி கிளினிக் தந்தார். அதிலும் குறிப்பாக ஜெயங்கொண்டபட்டினம் பகுதியில் மினி கிளினிக் செயல்பட்டது. ஆனால் இன்றைக்கு இந்த அரசு அனைத்தையும் மூடிவிட்டது. திமு.க அரசை மக்கள் வீட்டுக்கு அனுப்பத் தாயாராகி விட்டனர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் எடப்பாடியார் தலைமையில் பொற்கால ஆட்சி மீண்டும் அமைந்தவுடன் தி.மு.க அரசால் நிறுத்தி வைக்கப்பட்ட மக்கள் நல திட்டங்கள் தொடரும்'' என்றார்.

Election Cuddalore CHITHAMPARAM admk
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe