சட்டமன்றத் தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறுவதை இலக்காகக் கொண்டு, வாக்குச்சாவடி அளவில் திமுகவைப் பலப்படுத்த வாக்குச்சாவடி முகவர்கள் மண்டல பயிற்சி மாநாடுகளை நடத்த திமுக திட்டமிட்டுள்ளது. அதன்படி திருவடந்தை, திருப்பத்தூர், மதுரை, கோவை ஆகிய நகரங்களில் இந்த மண்டல மாநாடு நடத்த திமுக திட்டமிட்டுள்ளது.

Advertisment

அதன்படி, கடந்த 11ஆம் தேதி திமுகவின் வாக்குச்சாவடி முகவர்கள் மண்டல பயிற்சி மாநாடு (11-02-26) காஞ்சிபுரம் மாவட்டம் திருவிடந்தையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் 49 சட்டமன்ற தொகுதிகளைச் சேர்ந்த 1.70 லட்சம் வாக்குச்சாவடி குழு உறுப்பினர்களுக்கு தேர்தல் களப்பணி குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

Advertisment

அதை தொடர்ந்து, திருப்பத்தூரில் திமுக வடக்கு மண்டல பூத் ஏஜென்ட் பயிற்சி மாநாடு இன்று (14-02-26) மாலை நடைபெற்றது. இதற்காக சென்னையில் இருந்து ரயில் மூலம் ஜோலார்பேட்டை சென்ற முதல்வருக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் சாலையில் நடந்து சென்று மக்களை சந்தித்து குறைகளைக் கேட்டார். இதையடுத்து மாநாட்டு மேடைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வந்தார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நூற்றுக்கு நூறு வெற்றியை நாம் பெற்றோம். அப்போது இருந்ததை விட அதிகமான திட்டங்களை நாம் இப்போது நிறைவேற்றிருக்கிறோம். எல்லா தரப்பு கோரிக்கைகளையும் தீர்த்து வைத்திருக்கிறோம். அதனால் பெரிய வெற்றியை வரும் சட்டமன்றத் தேர்தலில் உங்கள் மூலமாக நான் எதிர்பார்க்கிறேன். 2019இல் இருந்து நாம் எதிர்கொண்ட எல்லா தேர்தல்களிலும் நமக்கு வெற்றி மேல் வெற்றி தான். அதுவும் சாதாரண வெற்றி அல்ல, சதிகளை முறியடித்த சரித்தர வெற்றி. ஒவ்வொன்றும் எதிரிகளை கலங்கடிக்கக்கூடிய வெற்றி. இந்தியா முழுக்க எந்த டிரண்ட் இருந்தாலும், தமிழ்நாட்டுடைய நிரந்தர டிர்ண்ட் பிளாக் அண்ட் ரெட் தான், கருப்பு சிவப்பு தான். 2026 சட்டமன்றத் தேர்தலிலும் நாம் தான், ஏழாவது முறையாக திமுக ஆட்சி தான். இதை நான் ஆணவத்தில் சொல்லவில்லை, ரொம்ப அடக்கத்தோடு மிகவும் பணிவோடு நம் அரசு செய்திருக்கக்கூடிய சாதனைகள் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையில் சொல்கிறேன்.

Advertisment

இதுவரை இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய ஒவ்வொரு தொகுதியும் திமுக கோட்டை என்று நாம் இந்த முறை நிரூபித்து காட்ட வேண்டும். 2026 திமுகவின் வெற்றி என்பது இனி பல ஆண்டுகளுக்கு அரசியல் ஆய்வாளர்கள் வியந்து பேசக்கூடிய வரலாற்று வெற்றியாக இருக்க வேண்டும். என்னதான் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் என புது புது ஊடகங்கள் வந்தாலும் மக்களை நேரில் சந்தித்து வாக்கு கேட்கிற பிரச்சாரத்திற்கு எதுவும் ஈடாகாது. பரம்பரை பரம்பரை திமுகவுக்கு வாக்களிக்கிற குடும்பமாக இருந்தாலும் சரி, இதுவரை நமக்கு வாக்களிக்காத குடும்பமாக இருந்தாலும் சரி, பிரச்சாரத்தின் கடைசி நிமிடம் வரை மக்களை சந்தித்து சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும். எல்லா இடங்களிலும் டிஎம்கே பிராண்ட் தான் தெரிய வேண்டும்.

நேற்று காலை விடிந்ததும் 31 லட்சம் பெண்கள் முகத்திலும் ஒரு சேர புன்னகையை கொண்டு வந்திருக்கிறோம். அவர்கள் காலையில் கேட்ட முதல் ரிங்டோனே ரூ.5,000 கலைஞர் மகளிர் உரிமைத் தொகை அவர்கள் அக்கவுண்டில் வந்து சேர்ந்ததற்கான மெசேஜ் டோன் தான். தேர்தலை காரணம் காட்டி மகளிர் உரிமைத் தொகையை தடுக்க நினைத்த சதியை முறியடித்திருக்கிறோம். பா.ஜ.கவைச் சேர்ந்த ஒருத்தரை வைத்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கை தொடர்ந்து தேர்தல் நெருக்கத்தில் மக்கள் திட்டங்களை நிறுத்த வேண்டும் என்று திட்டம் போட்டார்கள். ஒன்றிய பா.ஜ.க அரசை பொறுத்தவரைக்கும் அவர்களும் மக்களுக்கு நல்லது செய்யமாட்டார்கள், நல்லது செய்யவும் விடவும் மாட்டார்கள். தமிழ்நாட்டு மகளிருக்கு நான் கொடுத்த உறுதிமொழி தான் உரிமை தொகை, அதற்கு தடை போட நாட விட்டுவிடுவேனா? அதனால் தான் மக்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்து மக்கள் விரோதிகளுக்கு ஷாக் கொடுத்தோம். இது தான் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுடைய ஸ்டைல். ஓரவஞ்சனைக்கும், வஞ்சகத்துக்கும் ஒரு முகம் இருந்தால் அதுதான் ஒன்றிய பா.ஜ.க அரசு. இதுவரைக்கும் தமிழ்நாட்டுக்கு எதாவது ஒரு சிறப்பு திட்டம் அறிவித்திருக்கிறார்களா? இந்த கேள்விக்கு முறையாக பதில் பிரதமரோ, உள்துறை அமைச்சரோ பதில் சொல்லவில்லை, பதில் சொல்ல முடியவில்லை. பா.ஜ.க தலைமையில் இருந்தும் இதற்கு பதில் வரவில்லை, பா.ஜ.கவின் கிளைச் செயலாளராக இருக்கிறார் பழனிசாமியிடம் இருந்து பதில் இல்லை” என்று பேசினார்.