ஜாக்டோ ஜியோ அமைப்பைச் சேர்ந்த தமிழ்நாடு அரசு ஊழியர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றுவதாக சில தினங்களுக்கு முன்பு தமிழக அரசு உறுதியளித்திருந்தது. 

Advertisment

அதில், உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் மாநில அரசு அலுவலர்கள் பெற்ற கடைசி மாத ஊதியத்தில் 50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியமாக வழங்கப்படும் என்றும், 50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு ஆண்டுதோறும் ஆறு மாதத்திற்கு ஒருமுறை அரசு அலுவலர்களுக்கு வழங்கப்படுவதற்கு இணையான அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும் என்றும், அரசு அலுவலர்கள் ஓய்வு பெறும் போதும், பணிக்காலத்தில் இறக்க நேரிடும் போதும், அவரவரின் பணிக்காலத்திற்கேற்ப 25 இலட்சம் ரூபாய்க்கு மிகாமல் பணிக்கொடை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு அரசு ஊழியர்கள் சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது, அதோடு முதலமைச்சருக்கு நன்றியும் தெரிவிக்கப்பட்டது.

Advertisment

இந்த நிலையில் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் திட்டத்தை அறிவித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் சென்னை நந்தனம் பகுதியில் இன்று (08-02-26) ‘நன்றி அறிவிப்பு மாநாடு’ என்ற பெயரில் மாநாட்டை நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசியதாவது, “நீங்கள் மதிக்கப்பட வேண்டும், உங்கள் கண்ணீர் துளிகளை துடைக்கப்பட வேண்டும் என்று தான் உங்களுடைய கோரிக்கைகளை நாங்கள் நிறைவேற்றி இருக்கிறோம். மக்கள் பிரதிநிதிகளாக ஆட்சிக்கு வரக்கூடிய வரக்கூடிய நாங்களும், அரசு ஊழியர்களாக மக்களுக்காக பணியாற்றக்கூடிய நீங்களும் சேர்ந்து தான் அரசாங்கம். ஒரு நாணயத்தினுடைய இரண்டு பக்கங்களாக இருக்கக்கூடிய அமைச்சரவையும், அரசு ஊழியர்களையும் ஒரு சேர  பார்ப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி  அடைகிறேன்.

அரசியலில் கொள்கை பிடிப்போடு இயங்குகிற நாங்கள்  மக்கள் நலனுக்காக உருவாக்குகிற  திட்டங்களை  வெற்றிகரமா அவர்களிடம் கொண்டு போய் சேர்க்கிற பெருங்கடமையை செய்பவர்கள் அரசு ஊழியர்களாக நீங்கள் தான். அதே போல் ஆசிரியர்கள் செய்வது பணி என நான் சொல்ல மாட்டேன், நீங்கள் செய்வது தொண்டு. உங்களால் தான் இந்தியாவில் பள்ளிக்கல்வியில் இரண்டாவது சிறந்த மாநிலமாக  நம்முடைய தமிழ்நாடு இன்றைக்கு விளங்கிக் கொண்டிருக்கிறது.  நீங்கள் பாடுபட்டு உருவாக்கியவர்கள் தான்  உலகம் முழுக்க நல்ல பணிகளையும்  பொறுப்புகளையும் இருந்து  தமிழ்நாட்டுக்கும் இந்திய நாட்டுக்கும்  பெருமை சேர்க்கிறார்கள்.  இப்படி  இந்தியாவோடு எதிர்காலமான மாணவர்களை  உருவாக்கக்கூடிய உருவாக்கிக் கொண்டிருக்கிற  ஆசிரியர்கள் மற்றும்  பேராசிரியர்களுடைய நலனை பாதுகாக்கிற அரசு தான் திமுக அரசு. நம் திராவிட மாடல் அரசில்  நாட்டுக்கே முன்னோடியான முத்திரை திட்டங்களை செயல்படுத்திட்டு இருக்கிறோம்.

Advertisment

இந்த திட்டங்களால் திராவிட மாடல் அரசுக்கு நற்பெயரும் செல்வாக்கும் கிடைத்திருக்கிறது என்றால் அந்த பெருமையில் பெரும் பங்கு அரசு  ஊழியர்களுக்கான உங்களுக்காகத்தான். அது உங்களுக்குத்தான் முழு உரிமை இருக்கிறது. உங்களுடைய 20 ஆண்டு கால கோரிக்கையை  நிறைவேற்றும் வகையில் பழைய ஓய்வூதிய திட்டத்தோடு பலன்களை வழங்கக்கூடிய புதிய திட்டமான தமிழ்நாடு  உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை  செயல்படுத்தி இருக்கிறோம். இவ்வளவு பெரிய திட்டத்தை எப்படிப்பட்ட சூழலில்  நிறைவேற்றி இருக்கோம் என்று மற்ற எல்லாரையும்  விட உங்களுக்கு நன்றாக தெரியும் ஒவ்வொரு ஆண்டும்  நமக்கான வரி பகிர்வை ஒன்றிய அரசு குறைத்துகொண்டே இருக்கிறது. ஒன்றிய அரசினுடைய திட்டங்களுக்கான நிதியை கூட குறைத்து இருக்கிறார்கள். அந்த நிதியை கூட முறையாக வழங்குவதில்லை. ஜிஎஸ்டி மாற்றங்களால் மாநிலத்துடைய  வரி வருவாய் குறைந்து கொண்டே இருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் எல்லா துறைகளிலும் நலத்திட்டங்களை செய்தாக வேண்டும்.  வருமானம் குறைவு, செலவு அதிகம் இதுதான்  நம்முடைய நிலை.

பேரறிஞர் அண்ணா, பெட்டி  இருக்கு பூட்டு இருக்கு சாவி இருக்கு ஆனால் பெட்டி காலியா இருக்கு என்று சொன்னார். திட்டமிட்டு செயற்கையாக இந்த நிதி நெருக்கடியை உருவாக்கிறார்கள். அரசியல் ரீதியாக மட்டுமல்ல நிர்வாக  ரீதியாகவும் அவர்களை வெற்றிகரமாக சமாளித்துதான் அரசு ஊழியர்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றிட்டு இருக்கிறோம். பழைய ஓய்வூதியம் குறித்த கோரிக்கையை 22 ஆண்டுகளாக நீங்கள் வைத்துகொண்டே இருக்கிறீர்கள். யார் ஆட்சியில் இந்த உரிமை பறிக்கப்பட்டது? அதிமுக ஆட்சியில். அப்போது நீங்கள் நடத்தின போராட்டங்கள் சாதாரணமானதா? வேர்வைத் துளி சிந்தி உழைத்த உங்களுக்கு இரத்த கண்ணீரை வர வைத்தது தான் கருணை இல்லா அதிமுகவுடைய ஆட்சி. ஆனால் இது அனைவரையும் அரவணைக்கக்கூடிய கருணை  வடிவமான திமுக ஆட்சி.

உங்களுடைய நலன் மற்றும்  எதிர்பார்ப்புக்கள், தமிழ்நாட்டுடைய நிதிநிலை, எதிர்காலத்தில் அனைத்து அரசு அலவலர்கள் மற்றும் ஓய்வூதியதார்களுக்கு எந்த வித தடைகளும் இல்லாமல் முறையாக ஊதியமும் ஓய்வூதியம் கிடைக்க செய்ய  வேண்டிய பொறுப்பு என்று எல்லாவற்றையும் பரிசீலனை செய்துதான்  தமிழ்நாடு உறுதிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை அறிவித்தோம். எதிர்கட்சி தலைவராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியில் இருந்தபோது அரசு ஊழியர்களை எப்படி கொச்சைப்படுத்தி பேசினார். ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்கு  ஒரு எதிரான கூட்டம் அமைத்திருக்க கூடியவர்கள் அரசு ஊழியர்களுக்கு மட்டும் ஆதரவாக இருப்பார்களா? ஆனால் நாங்கள் அப்படி இல்லை. எங்களை பொறுத்தவரைக்கும் சொன்னதைதான் செய்வோம், சொல்வதைதான் செய்வோம். உங்களுடைய கோரிக்கைகள், கனவுகள், எதிர்பார்ப்புக்களை நாங்கள் நிச்சயம் திராவிட மாடல் 2.0 ஆட்சியிலும் தொடர்ந்து நிறைவேற்றுவோம். அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் எங்களுக்கு பக்கபலமாக இருங்கள். உங்களுக்கு  பகவலமாக நாங்க இருக்கிறோம்” என்று பேசினார்.