MK Stalin arrives - DMK flag hoisted on 110-foot pole Photograph: (dmk)
சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் மண்டல மாநாடுகளை நடத்தி வருகிறது திமுக. அதன் தொடர்ச்சியாக திருச்சியில் திமுக நிர்வாகிகள் மாநாடு இன்று நடைபெற்று வருகிறது.
திமுகவினர். முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் வரும் சட்டமன்றத் தேர்தலில் பெரும் வெற்றியைப் பெற்றிடும் பொருட்டு திமுக இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு மாநாடுகள், வெல்லும் தமிழ்ப் பெண்கள் மாநாடுகள், என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி மாநாடுகள் எனத் தொடர்ச்சியாக பல்வேறு மாநாடுகளை நடத்தி முடித்துள்ளது திமுக. இந்நிலையில் இன்று மாலை திருச்சி சிறுகனூர் மாநாடு தொடங்கியது. இந்த மாநாட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மாநாடு நடைபெறும் இடத்திற்கு வந்து சேர்ந்த மு.க.ஸ்டாலினுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு வழங்கினர். தொடர்ந்து 110 அடி உயரம் கொண்ட கொடி கம்பத்தில் திமுக கொடியை முதல்வர் ஏற்றிவைத்தார்.
Follow Us