சிதம்பரம் அருகே கிள்ளை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பிச்சாவரம் சதுப்பு நில காடுகள் அமைந்துள்ளது. 5 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் சுரபுன்னை மரங்கள், தில்லை மரங்கள், குப்பங்கழி மரங்கள் உள்ளிட்ட பல்வேறு மூலிகை தாவரங்கள் அடங்கிய பகுதியாக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்வாய்களுடன் அமைந்துள்ளது. இது தமிழக வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பாதுகாக்கப்பட்ட பகுதியாகும்.

Advertisment

இந்த பகுதியில் தமிழக சுற்றுலா துறை சார்பில் படகு சவாரி செய்யும் வகையில் சுற்றுலா மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் தினம் தோறும் வருகை தந்து படகு சவாரி செய்து மகிழ்ந்து செல்கிறார்கள்.

Advertisment

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, சுற்றுலா பயணிகள் மற்றும் வனத்துறையினர் படகில் செல்லும்போது அதிசய பொன்னிற குள்ள நரிகள் சதுப்புநில காடுகளில் இருந்ததை  பார்த்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பின்னர் புகைப்படங்களை எடுத்துள்ளனர்.

இதுகுறித்து வனத்துறை அலுவலர் ஒருவரிடம் கேட்டபோது, ‘பிச்சாவரம் காடுகளில் அதிக அளவு மீன் மற்றும் நண்டு இருப்பதால் இதனை மட்டும் உன்னை கூடிய பொன் நிற குள்ளநரிகள் இங்கு அதிகம் காணப்படுகிறது. பொன் நிறத்தில் உள்ள குள்ளநரி அரிதான ஒன்றாக கூறுகிறார்கள். அதே போல் நீர் நாய்களும் உள்ளன. இது பொதுமக்களுக்கு எந்த ஒரு இடையூறும் தராது. பொதுமக்களை கண்டாலே பயந்து ஓடிவிடும். அதே நேரத்தில் விலங்குகளுக்கு எந்த இடையூறும் செய்யாத வகையில் எந்த பிரச்சினையும் இல்லை. காடுகளில் விலங்குகளிடம் தனிமையில் மாட்டக்கூடாது. காடுகளில் எத்தனை குள்ள நரிகள், நீர்நாய்கள் உள்ளது என்பது குறித்து இதுவரை கணக்கெடுப்பு நடத்தவில்லை. குள்ளநரி வாழ்விடம் தேடி வந்து இங்கேயே தங்கி இனப்பெருக்கத்தின் மூலம் தற்போது அதிகரித்திருக்கலாம்’ என கூறுகின்றனர்.

Advertisment