Ministers inaugurated Tamil Nadu's first Jallikattu in Thachankurichi
தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு ஜனவரி மாதம் தொடங்கி மாநிலம் முழுவதும் திருவிழா போல நடத்தப்படுகிறது. இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் அதிக வாடிவாசல்கள் உள்ளது என்பதைப் போல ஒவ்வொரு ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு விளையாட்டுப் போட்டியும் புதுக்கோட்டை மாவட்டம் தச்சன்குறிச்சியில் தான் தொடங்குவது வழக்கம்.
அதே போல, இந்த ஆண்டுக்கான முதல் ஜல்லிக்கட்டு தச்சன்குறிச்சியில் இன்று (03-01-26) நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் அருணா தலைமையில் ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து, முதல் ஜல்லிக்கட்டை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை ஆகியோர் பச்சைக் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/03/jal2-2026-01-03-10-19-37.jpg)
முதல் ஜல்லிக்கட்டில் தமிழ்நாடும் முழுவதும் இருந்து 700 க்கும் மேற்பட்ட காளைகளும், நூற்றுக்கணக்கான மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர். சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். மாலை வரை ஜல்லிக்கட்டு நடக்க உள்ளது.
Follow Us