அமெரிக்காவின் முக்கிய கார் நிறுவனமான போர்டு, சென்னையை அடுத்துள்ள மறைமலைநகர் நகரில் இயங்கி வந்தது. இந்த நிறுவனம் கார் உற்பத்தியைக் கடந்த 2021ஆம் ஆண்டு நிறுத்துவதாக அறிவித்தது. அதாவது மற்ற வெளிநாடுகளில் அதிக அளவில் உற்பத்தியைத் தொடங்க உள்ளதால் சென்னையில் செயல்பட்டு வரும் தொழிற்சாலையில் உற்பத்தியை நிறுத்துவதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து 2021இல் திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் இந்த தொழிற்சாலையில் மீண்டும் உற்பத்தியைத் தொடங்க பல்வேறு கட்ட முயற்சிகள் எடுக்கப்பட்டன.
இந்நிலையில் மறைமலைநகர் தொழிற்சாலையில் மீண்டும் உற்பத்தியைத் தொடங்க உள்ளதாக போர்டு அறிவித்துள்ளது. அதன்படி, இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில், தலைமைச் செயலகத்தில் கையெழுத்தாகியுள்ளது. அதாவது 3 ஆயிரத்து 250 கோடி ரூபாய் முதலீடு செய்வதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “இன்றைய நாள் நடந்த ஒரு விசயம் மனதுக்கு மிகவும் ஒரு மகிழ்ச்சியை அளிக்கிறது.
ஏனென்றால் நீண்ட நாட்களாக பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இன்று வெற்றி பெற்றிருக்கிறோம். இன்று தமிழ்நாட்டில் போர்ட் நிறுவனம் மீண்டும் தனது தொழிற்சாலையைத் துவங்கும் என்று உறுதி அளித்து ஒரு ஒப்பந்தம் கையெழுத்து இடப்பட்டிருக்கிறது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் மார்ட்டின் எவரட், மேத்யூ காட்லிஸ், சிவமனட்ட உள்ளிட்ட பலரும் நேரடியாக வந்திருந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட மற்றும் தொழில்துறையின் அரசு அதிகாரிகள் அனைவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது” எனத் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png) 
   Follow Us
 Follow Us/nakkheeran/media/media_files/2025/10/31/trb-raja-sec-pm-2025-10-31-12-45-37.jpg)