சிவகாசி ரயில் நிலையப் பெயர்ப்பலகையில் இந்தி மொழி எழுதப்பட்டுள்ளதாக தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம்சாட்டி கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழக நிதி மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சர் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “சிவகாசி ரயில் நிலையப் பெயர்ப்பலகையில், தமிழைப் பின்னுக்குத் தள்ளி இந்திக்கு முக்கியத்துவம் அளித்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
மக்களின் மொழி உணர்வுகளை மதிக்காமல், தென்னக ரயில்வே மேற்கொள்ளும் இத்தகைய மறைமுக இந்தித் திணிப்பு முயற்சிகளை உடனடியாகக் கைவிட வேண்டும். தமிழே முன்னவள், மூத்தவள், முதன்மையானவள்” எனப் பதிவிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/04/sivaka-2026-02-04-20-18-47.jpg)