Advertisment

“தமிழக அரசின் திட்டங்களைப் பல்வேறு மாநிலங்கள் பின்பற்றுகின்றன” - அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம்!

tn-budget-thangam-2026-1

2026 - 2027ஆம் நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காகத் தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று (17.02.2026) காலை 09:30 மணிக்குக் கூடியது. அப்போது இடைக்கால நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து உரையாற்றினார். தொடக்கத்தில், “பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை” என்ற திருக்குறளை மேற்கோள்காட்டி உரையாற்றினார். அந்த உரையில், “தமிழ்நாட்டில் வறுமையை ஒழிக்கும் இறுதிப் போரைத் தொடங்கியுள்ளோம். ஏற்றுமதியைப் பெருக்கி, பண வீக்கத்தைக் குறைத்து, உயர்ந்த பொருளாதார வளர்ச்சியைத் தமிழ்நாடு அடைந்துள்ளது. தமிழ்நாடு இரட்டை இலக்கு பொருளாதார வளர்ச்சியை அடைய பல்வேறு நல்ல திட்டங்களைச் செயல்படுத்திய முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி.

Advertisment

ஏற்றுமதியைப் பெருக்கி, பண வீக்கத்தைக் குறைத்து, தொழிலாளர் நலன் காக்கும் பெரும் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மையை மீறியும் தமிழ்நாடு வளர்ந்து வருகிறது. இந்தியாவின் 2வது பெரிய பொருளாதாரமாகத் தமிழ்நாடு உள்ளது. மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு அதிக நிதி வழங்கப்பட்டுள்ளது. அதாவது 6 லட்சம் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1.40 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 19 தோழி விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. மகளிர் நலன் காக்கும் இத்தகையைத் திட்டங்களை பல்வேறு மாநிலங்கள் பின்பற்றத் தொடங்கி உள்ளன. மகப்பேறு இறப்பு விகிதம் மற்றும் சிசு இறப்பு விகிதம் தேசிய சராசரியை விடத் தமிழ்நாட்டில் குறைவாக உள்ளது. பெண் ஓதுவார்களை நியமனம் செய்தது தமிழக அரசின் மகத்தான சாதனை ஆகும். மகளிருக்கான விடியல் பேருந்து திட்டத்தில் 888 கோடி முறை மகளிர் பயணம் செய்து பயனடைந்துள்ளனர்.

Advertisment

உணவு உற்பத்தியில் வரலாறு காணாத வளர்ச்சியைப் பெற்றுள்ளோம். செயற்கை நுண்ணணுறவு (ஏ.ஐ.) உள்ளிட்ட துறைகளில் இளைஞர்கள் வளர திட்டங்கள் தீட்டப்படும் வகையில் தமிழர் பெருமையைப் பறைசாற்றும் வகையில் பல அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டிற்கே வழிகாட்டும் வரலாற்றுக் கடமையைச் செய்து வருகிறோம். அதோடு சோழர் அருங்காட்சியகம், நவாய் அருங்காட்சியகம், நொய்யல் அருங்காட்சியகம் என்று மொத்தம் ரூ. 285 கோடியில் அருங்காட்சியகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும் உலகத் தரத்தில் கீழடி மற்றும் பொருநை அருங்காட்சியகம் திறந்து வைக்கப்பட்டு பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன.

tn-budget-thangam-2026

மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு வீடுகள் கட்டித் தரும் திட்டத்தின் கீழ் 10 ஆயிரத்து 469 வீடுகள் கட்டுவதற்கு, ரூ. 630 கோடி ஒதுக்கப்பட்டு, 6 ஆயிரத்து 10 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. திருக்குறளை அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன” எனத் தெரிவித்தார். 

budget session Thangam Thennarasu tn assembly tn budget Budget 2026
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe