Advertisment

“காங்கிரஸ் கட்சி கூட்டணிக்கு வந்தால் வரட்டும்; வரவில்லை என்றால் போகட்டும்.” - அமைச்சர் ராஜகண்ணப்பன் பேச்சு!

rajakannappan-mic-dmk

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கீரமங்கலத்தில்  'தமிழ்நாடு தலைகுனியாது' என்ற திமுகவின் பிரச்சார பொதுக்கூட்டம் கடந்த 09ஆம் தேதி (09.02.2026) நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசுகையில், “சிறுதுளி பெருவெள்ளம் என்பதைப் போல வளர்ந்து வந்த இயக்கமாக திமுக இருக்கிறதே தவிர வேறு ஒன்றும் கிடையாது. அனைவரும் திமுகவில் இருந்தவர்கள் இல்லை. ஒரு காலத்தில் காங்கிரஸ் 1967ஆம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்தது. இப்போது ஆட்சிக்கு வர முடியுமா?. இதனைச் சொன்னால் கோபித்துக் கொள்வார்கள். கூட்டணியில் இருக்கிறார்கள். காங்கிரஸில் இருப்பவர்களில் ஒரு சிலர் உயிரை வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்” எனப் பேசியிருந்தார். 

Advertisment

இத்தகைய பரபரப்பான சூழலில் தான் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் திமுக - காங்கிரஸ் கூட்டணி, மற்றும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு தொடர்பாகத் தனியார் ஆங்கில தொலைக்காட்சி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், “திமுக - காங்கிரஸ் கூட்டணி இந்த தேர்தலில் நிச்சயம் இணக்கமாக இருக்கும். மற்றவர்கள் நினைப்பது மாதிரி இல்லை. ஊடகங்கள் அது போன்ற (திமுக - காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் இருப்பது போன்று) ஒரு பிம்பத்தை ஏற்படுத்துகிறார்கள். திமுக - காங்கிரஸ் கூட்டணியில் இரு கட்சியினரும் நன்றாக இருக்கிறோம். ஆட்சியில் பங்கு தமிழகத்திற்கு ஒத்து வராது என்பது எங்களுக்கும் (திமுகவுக்கும்) தெரியும். அவர்களுக்கும் (காங்கிரஸுக்கும்) தெரியும். இது இடையில் உள்ள சிலர் கிளப்பிவிடும் பிரச்சனை. கூட்டணியில் ஏதாவது முறிவு ஏற்படுமா? என்று திட்டமிட்டு சதி செய்கின்றனர். அதனைப்பற்றி திமுகவும், காங்கிரஸும் கவலைப்படுவதில்லை” எனத் தெரிவித்திருந்தார். 

Advertisment

இந்நிலையில் மதுரையில் நடைபெற்ற திமுக பிரச்சார பொதுக்கூட்டத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசுகையில், “பாஜக காலூன்ற முடியாது. அதிமுக என்ற கட்சி இருந்தது. அது எம்.ஜி.ஆர்.,  ஜெயலலிதாவோடு போய்விட்டது. திராவிட இயக்கம்தான் அண்ணா தொடங்கியது. அதாவது திராவிட முன்னேற்ற கழகம். அதிமுகவில் இருக்கும் தொண்டர்கள் எல்லாம் வந்துவிட்டார்கள். அங்கு யாரும் கிடையாது. நிர்வாகிகள் மட்டும் சீட்டுக்காக உட்கார்ந்து கொண்டு இருக்கிறார்கள். நமக்கு சீட்டு கிடைக்குமா?. உனக்கு கிடைக்குமா? எனக்கு கிடைக்குமா? எனஉட்கார்ந்து கொண்டு இருக்கிறார்கள். அவ்வளவுதானே தவிர தொண்டர்கள் கிடையாது. 

mks-congress-team
கோப்புப்படம்

ராமநாபுரத்தில் உள்ள முதுகுளத்தூரில் அதிமுகவிற்கு டெபாசிட் போய்விட்டது. ஓபிஎஸ்  தேர்தலில் போட்டியிட்டார். நான் வேண்டாம் என்று சொல்லவில்லை. நான் 12 தேர்தலில் போட்டியிட்டு 8 தேர்தலில் வெற்றி பெற்றுள்ளேன். 4 தேர்தலில் தோற்றுள்ளேன். அதற்காக வருத்தப்பட்டது கிடையாது. 13வது தேர்தல் நிற்க போகிறேன். ஜெயிக்க போறேன். தேர்தலில் வெற்றி தோல்வி என்பது சகஜம். ஆனால் ஒரு கொள்கை இருக்க வேண்டும்ம். பேரறிஞர் அண்ணா இந்த (திமுக)  இயக்கத்தை தொடங்கினார். அவருடைய தலைவர் யார் என்றால் பெரியார். நாம் எல்லாம் திராவிடஇயக்கத்தை சேர்ந்தவர்கள். திராவிட இயக்கம் எதற்காக உருவாகப்பட்டது கொட்டுகின்ற மலையில் ராபின்சன் பூங்காவில் அண்ணா இந்த இயக்கத்தை ஆரம்பித்தார். மிட்டாமிராசுகள், பட்டாக்காரர்கள், பெருந்தனக்காரர்கள் ஆலய அதிபர்கள், தொழில்திபர்கள் இவர்களை எதிர்த்துதான் நம்முடைய இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது. 

நாம் எல்லாம் இப்போது அமைச்சர்களாக, சட்டமன்ற உறுப்பினர்களாக, நாடாளுமன்ற உறுப்பினர்களாக, ஒன்றிய செயலாளராக, நகர செயலாளராக பேரூர் கழக செயலாளராக நம்முடைய அடித்தட்டு மக்கள் எல்லாம் இன்றைக்கு பதவிக்கு வந்திருக்கிறோம் என்று சொன்னால் திராவிட ஆட்சி வந்ததால் தான் வந்தோம்.காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணியை பற்றி முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசிக்கொள்வார். அவர்கள் (காங்கிரஸ்) வந்தால் வரட்டும். வரவில்லை என்றால் போகட்டும். யாரும் கூட்டணியை நம்பி கட்சி இல்லை. அவர்களை நம்பி அரசியல் நடத்த முடியாது. அது அவர்களுடைய இஷ்டம். அது முதல்வருடைய இஷ்டம்” எனப் பேசினார்.  

Assembly Election 2026 Alliance mk stalin congress dmk madurai rajakannappan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe