Advertisment

“இதனைச் சொன்னால் கோபம் கொள்வார்கள்” - காங்கிரஸ் குறித்து அமைச்சர் ராஜகண்ணப்பன் பரபரப்பு பேச்சு!

pdu-rajakannappan

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்றத் தொகுதி கீரமங்கலம் பேரூராட்சியில் தமிழ்நாடு தலைகுனியாது என்ற தலைப்பில் திமுக பொதுக்கூட்டம் புதுக்கோட்டை தெற்கு மா.செ அமைச்சர் ரகுபதி தலைமையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் முன்னிலையில் நடந்தது. இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் ராஜகண்ணப்பன் கலந்து கொண்டு பேசிய பேச்சு கூட்டணி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசும் போது, “பள்ளிகளில் சீருடை கொடுத்து ஏற்றத்தாழ்வை அகற்றியவர் கலைஞர். நான் 3 துறைகளின் அமைச்சராக இருக்கும் போது எடப்பாடி எம்.எல்.ஏ. செங்கோட்டையன் தான் என்னிடம் கூட்டி வருவார். ஆனால் இன்று அமித்ஷா அதிமுகவில் இருக்கிறார். எம்.ஜி.ஆர். நடிகராக இருந்ததால் ஜெயிக்கவில்லை. அவர் தி.மு.க.வில் 30 வருடம் இருந்தவர் அதனால் ஜெயித்தார். இனி திமுகவை யாராலும் வெல்ல முடியாது. காங்கிரஸில் ஒருத்தர், 2 பேர் இருந்து உயிர வாங்கிட்டு இருக்கிறார்கள். கூட்டணியில் இருப்பதால் இதனை சொன்னால் கோபம் கொள்வார்கள். கூட்டணியில் இருக்கிறார்கள். அது குறித்து  தலைவர் (முதல்வர் மு.க. ஸ்டாலின்) பார்த்துக்கொள்வார். 

Advertisment

ஒரு நிகழ்ச்சியில் செல்வப்பெருந்தகை உடன் கலந்து கொண்டேன். படம் எடுத்துக் கொண்டோம். பாஜக எல்லாம் கிரிமினல். அடுத்தவன் சொத்தை அபகரிக்கிறது. அமலாக்கத்துறை, வருமானவரித்துறையை துறை வைத்திருக்கிறார்கள். அமித்ஷா மிரட்டலுக்கு பயந்துவிட்டார் எடப்பாடி. சீட்டுக்காகக் கட்சி நடத்துகிறது தான் அதிமுக. இப்போது கூட்டணி ஆட்சி என்கிறார்கள். சமூகநீதியால் இன்று 70% பெண்கள் 30% ஆண்கள் வேலைக்கு வருகிறார்கள். திமுக கூட்டணியில் கூட்டணி ஆட்சி இல்லை. உங்களுக்கு வேண்டியதைச் செய்து கொடுக்கிறோம். ஒரு எஸ்.சி பெண் எம்எல்ஏ தொகுதிக்கு போகிறேன் அங்கே எல்லா வேலைகளும் முடிந்துள்ளது. சாலை சரியில்லை என்று கேட்கிறார்கள். ரோடு போட்டுக் கொடுத்தால் வாகனத்தில் வேகமாக போய் விபத்தில் இறந்து போகிறார்கள். ப.சிதம்பரம் வழக்கு நிறுத்தி வைத்திருக்கிறேன்” என்றார்.

Alliance congress dmk rajakannappan pudukkottai
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe