புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கீரமங்கலத்தில் திமுக சார்பில் தமிழ்நாடு தலைகுனியாது பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் ரகுபதி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “11 தேர்தல்களில் தோற்ற எடப்பாடி பழனிசாமி இப்போது 12வது தேர்தலிலும் தோற்பார். ஒரு டஜன் தேர்தல்களில் தோல்விகளைக் காண்பார் எடப்பாடி பழனிசாமி. மகளிருக்கு உரிமைத் தொகை மாதம் ஆயிரம் கொடுக்க முடியாது என்று சொன்னவர் எடப்பாடி பழனிசாமி. ஆனால் இன்று வரை கொடுக்கிறோம். 

Advertisment

இப்போது நாங்கள் ரூ.2000 கொடுக்கிறோம். இலவச பேருந்து பயணம் கொடுக்கிறோம் என்கிறார். டெல்லியில் சொன்னார்கள் தற்போது படிப்படியாகக் குறைத்துக் கொண்டிருக்கிறார்கள். சொன்னதை மட்டுமல்ல சொல்லாததையும் செய்கிறவர்  முதல்வர் மு.க. ஸ்டாலின். காலை உணவுத்திட்டம், உலக அளவில் முதல் திட்டம் இது இன்று பல நாடுகள் பின்பற்றுகிறது. தமிழ்நாடு வளர்ச்சியடைந்துள்ளது. அதனால் தலைநிமிர்ந்து நிற்கிறோம். தமிழ்நாட்டில் போக்சோ வழக்கு வருகிறது. பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று எடப்பாடி பழனிசாமி சொல்வார். மற்ற மாநிலங்களில் எத்தனை வழக்குகள் பதிவாகிறது எத்தனை புகார்கள் மறைக்கப்படுகிறது. 

Advertisment

சமீபத்தில் லக்னோ சென்றேன். அங்கே சொல்கிறார்கள் இந்தியாவிலேயே முன்னேறிய மாநிலம் தமிழ்நாடு என்றார்கள். ஆன்மீகத்திற்கு எதிரானவர்கள் திமுக என்பார்கள். 4000 குடமுழுக்கு நடத்தியது திராவிட மாடல் அரசு தான். ராமா ராமா என்று சொல்லிக் கொண்டிருந்தவர்களை தற்போது ராமனை கைவிட்டுட்டு முருகா முருகா என ஓட விட்டிருக்கிறோம். எந்த கோசம் போட்டு வந்தாலும் எதுவும் நடக்காது. திருட்டுத்தனமாக எந்த வேடம் போட்டு வந்தாலும் தமிழ்நாட்டில் உள்ளே நுழைய முடியாது” என்றார்.