Advertisment

“தமிழர்களுக்கு எதிராகப் பேசுவதே ஆளுநரின் வேலை” - அமைச்சர் ரகுபதி கண்டனம்!

raviragu

Minister Raghupathi condemns The Governor’s job is to speak against Tamils

சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று (25-11-25) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அதில் அவர், “தமிழர்களுக்கு எதிராக பேசுவதையே வேலையாக ஆளுநர் ரவி வைத்திருக்கிறார். தமிழ்நாட்டில் பீகாரிகள் அச்சுறுத்தப்படுகிறார்கள் என தவறான தகவலை ஆளுநர் சொல்கிறார். எங்கே  போனாலும் தமிழனுக்கு எதிராக பேசுவதை கொள்கையாக கொண்டிருக்கக்கூடிய ஒருவர் தான் நம்முடைய ஆளுநரும், ஒன்றிய பா.ஜ.கவும். தமிழ் பற்று எங்களுக்கு தெரியாதா என்பார்கள். ஆனால், தமிழ் மொழிக்காக அவர்கள் ரூ.150 கோடி தான் ஒதுக்கினார்கள். ஆனால், சமஸ்கிருதத்துக்காக அவர்கள் ரூ.2,500 கோடி ஒதுக்கியிருக்கிறார்கள். இது தான் தமிழ் பற்றா? இன்றைக்கு மொழிவாரி சிறுபான்மையினர்களுக்கு உரிமை இல்லை என்பதை போல ஒரு வதந்தியையும்  ஆளுநர் சொல்லி இருக்கின்றார் .

Advertisment

தமிழ்நாட்டில் தெலுங்கு, மலையாளம், கன்னடம்  அதை போல மற்ற மொழிகள் பேசுகின்றவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் யாரும் எந்த குரலும் எழுப்பவில்லை, எந்த கூச்சலும் போடவில்லை. நாங்கள் தமிழ்நாட்டில் தமிழர்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம், தமிழ்  எங்களோடு இருக்கிறது, தமிழர்கள் எங்களோடு  இருக்கிறார்கள், நாங்கள் சகோதரர்களாக இருக்கிறோம் என்று சொல்லக்கூடிய தெலுங்கு பேசக்கூடியவர்கள், மலையாளம் பேசக்கூடியவர்கள், கன்னடம் பேசக்கூடியவர்கள் தமிழ்நாட்டில்  இருக்கிறார்கள். எங்களுடைய திராவிட மாடல் அரசு, யாருக்கும் எதிரானவர்கள் கிடையாது.   ஆனால் இன்றைக்கு பேட்டி  அளிக்கக்கூடிய ஆளுநர், தான் தமிழ்நாட்டில்  இருக்கின்றோம் என்பதை மறந்துவிட்டார்.

Advertisment

இங்கே இருக்கக்கூடிய மீனவர்களுக்காக நாங்கள் ஒன்றும் செய்யவில்லை போராடவில்லை என்கின்றார். மீனவர்கள், இலங்கை கடற்படையால் பிடிக்கப்படும்போது, பிரதமரோ அல்லது உள்துறை அமைச்சரோ அல்லது இந்த ஆளுநரோ ஏதாவது ஒரு அறிக்கை வெளியிட்டுருப்பார்கள் என்று அவர்களால் சொல்ல முடியுமா? நம்முடைய ஆளுநர், தமிழ்நாடு  தனித்து நிற்கிறது என்று சொல்லுகிறார். ஏதோ இந்தியாவில் இருக்கக்கூடிய எல்லா மாநிலங்களும் ஒன்றோடு ஒன்று  உறவோடு இருப்பது போலவும், தமிழ்நாடு மட்டும் துண்டிக்கப்பட்டுவிட்டது போலவும் ஒரு மாய தோற்றத்தை தன்னுடைய பேட்டியின் மூலமாக உருவாக்கி இருக்கிறார்.

தமிழ்நாடு, இந்தியாவில் இருக்கக்கூடிய எல்லா மாநிலங்களோடும் நல்ல உறவோடு இருக்கிறது என்பதற்கு பல மாநில முதலமைச்சர்களை அழைத்து வந்து நிகழ்ச்சிகளை நடத்தி இருக்கிற ஒரு மாநிலம் இந்தியாவிலே இருக்கிறது என்று சொன்னால் அது தமிழ்நாடுதான். ஆனால் ஆளுநர், வீணாக ஒரு பழியை சுமத்துகிறார். சில  நாட்கள் பொறுமையாக இருந்த ஆளுநர், இப்படியான கருத்துக்களை எல்லாம் சொல்லி இருக்கிறார். இந்தியை வைத்து மலிவான அரசியல் செய்ய வேண்டிய அவசியம் தமிழ்நாட்டுக்கு இல்லை ” என்று கூறினார்.

Governor Ravi minister ragupathi RN RAVI
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe