Advertisment

உலக கோப்பை ஹாக்கி போட்டி; கோப்பையைக் காட்சிப்படுத்தி விளையாடிய அமைச்சர்!

5

தமிழ்நாடு முதலமைச்சர் விளையாட்டினை மேம்படுத்திடவும், அதிகமான இளைஞர்கள் தங்களது தனித்திறன்கள் மூலம் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை நடத்தி வருகிறார். தமிழ்நாட்டில் முதல்முறையாக இளையோர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டி நடைபெறவுள்ளதையொட்டி, விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையில் கோப்பையினை காட்சிப்படுத்தும் நிகழ்வு தமிழகம் முழுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Advertisment

ஹாக்கி ஆடவர் ஜூனியர் உலகக் கோப்பை போட்டிகள் சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பால் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. இப்போட்டி எதிர்வரும் 28.11.2025 முதல் 10.12.2025 வரை தமிழகத்தில் சென்னை மற்றும் மதுரையில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் முதல் முறையாக 24 நாடுகள் பங்கேற்க உள்ளன.

Advertisment

கோப்பையானது கன்னியாகுமரி, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், சங்கரன்கோவில், கோவில்பட்டி, இராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, மன்னார்குடி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, உடுமலைப்பேட்டை, கோயம்புத்தூர், குன்னூர், புளியம்பட்டி, கரூர், நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், பாண்டிச்சேரி வழியாக கடலூர் மாவட்டத்திற்கு நவம்பர் 22-ம் தேதி கொண்டுவரப்பட்டுள்ளது.

4

இதனை கடலூர் மஞ்சக்குப்பம் அறிஞர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன், கடலூர் தொகுதி எம்.எல்.ஏ. கோ. ஐயப்பன் ஆகியோர் கலந்துகொண்டு இளையோர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் வழங்கப்படும் கோப்பையை விளையாட்டு வீரர்களுக்கு காட்சிப்படுத்தினர். பின்னர் அமைச்சர் மாவட்ட ஆட்சியருடன் இணைந்து ஹாக்கி மட்டையால் பந்தை அடித்து விளையாடினார்.

இவருடன் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார், மாநகராட்சி மேயர் சுந்தரராஜா, துணை மேயர் பா. தாமரைச்செல்வன், மாவட்ட வருவாய் அலுவலர் கோ. புண்ணியகோட்டி, கடலூர் வருவாய் கோட்டாட்சியர் சுந்தரராஜன், மாவட்ட விளையாட்டு அலுவலர் மகேஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

minister sports
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe