கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி உள்ளது கழுதூர், அரியநாச்சி கிராமங்கள். இப்பகுதிகளில் விவசாயிகள் மானாவாரி பயிராக மக்காச்சோளம் பயிர் செய்துள்ளனர்.இந்த மக்காச்சோளத்திற்கு தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக உரம் இடும் பணியில் விவசாயிகளும் விவசாயக் கூலித் தொழிலாளர்களும் ஈடுபட்டு பட்டுள்ளனர்.
அதன்படி நேற்று அரியநாச்சியை சேர்ந்த சிவக்குமார் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் மக்காச்சோள பயிர்களுக்கு உரம் இடும் பணிசெய்வதற்காக கழுதூரைச் சேர்ந்த சின்னப்பொண்ணு, கனிதா,பாரிஜாதம்,சிவக்குமாரின் மனைவி ராஜேஸ்வரி, தவமணி,ஆகியோர் ஈடுபட்டிருந்தனர். நேற்று மதியம் சுமார் ஒரு மணி அளவில் பலத்த இடி மின்னலுடன் மிகக் கனமழை பெய்தது. வேலை செய்து கொண்டிருந்த பெண்கள் மீது இடி மின்னல் தாக்கியுள்ளது. அதன் காரணமாக சம்பவ இடத்திலேயே ராஜேஸ்வரி, கனிதா, சின்னப்பொண்ணு ஆகிய நான்கு பேர்களும் உயிரிழந்தனர்.
மின்னல் தாக்கியதில் தவமணியின் இரண்டு கண்களும் பாதிக்கப்பட்ட நிலையில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். திட்டக்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான சி.வி.கணேசன் நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்தவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சென்னையிலிருந்து இரவோடு இரவாக புறப்பட்டு அதிகாலை 3 மணி அளவில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தவமணியைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/10/17/a5554-2025-10-17-20-21-10.jpg)
அதோடு அவரது மருத்துவச் செலவிற்காக நிதியுதவி வழங்கினார்.அங்கிருந்து புறப்பட்டு நேரடியாக திட்டக்குடி அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்த ராஜேஸ்வரி, கணிதா, சின்னப்பொண்ணு, பாரிஜாதம், ஆகியோரின் உடல்களைப் பார்த்து கண் கலங்கினார் .இறந்தவர்கள் உடல்களுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அமைச்சருடன் மாவட்ட ஆட்சியர் ஆதித்யா செந்தில் குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஆகியோரும் இறுதி மரியாதை செலுத்தினர்.
இந்த தகவலறிந்த தமிழக முதல்வர் உயிரிழந்த குடும்பத்தினருக்கு தலா ஐந்து லட்ச ரூபாய் அரசு சார்பாக நிவாரண நிதி வழங்கப்படும் என அறிவித்திருந்தார். மருத்துவமனை வளாகத்திலேயே உயிரிழந்த குடும்பத்தினருக்கு முதல்வர் அறிவித்த ஐந்து லட்ச ரூபாய்பாதிக்கப்பட்டகுடும்பத்தினரின் வங்கிக் கணக்கில் செலுத்தியதற்கான ஆவணங்களையும் வழங்கினார். உயிரிழந்த ஒவ்வொரு குடும்பத்தினரது இறுதிச் சடங்குகள் செலவிற்காக அமைச்சர் கணேசன் அவர்கள் தமது சொந்த செலவில் தலா ஐம்பதாயிரம் ரூபாய் வழங்கியதோடு இன்று நடைபெறும் இறந்தவர்களது இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகளுக்குச் சென்று கலந்து கொண்டார். அமைச்சரிடம் உயிரிழந்த குடும்பத்தினர்கள், உறவினர்கள் கதறி அழுதனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)
/nakkheeran/media/media_files/2025/10/17/a5553-2025-10-17-20-17-27.jpg)