அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன. இதில் திமுக  8 மண்டல பொறுப்பாளர்களை நியமித்துத் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது.  அதில் தமிழகம் முழுவதும் வீடு வீடாகச் சென்று மக்களை சந்தித்து குறைகளை கேட்கவும், அதனுடன் திமுக உறுப்பினர் சேர்கையை மேற்கொள்ளவும் ஓரணியில் தமிழ்நாடு என்ற இயக்கத்தைக் கடந்த ஜூலை 1-ஆம் தேதி முதல்வர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தொடர்ந்து 45 நாட்களுக்கு இந்த பிரச்சாரத்தை முன்னெடுக்க உள்ளார்.

இந்த நிலையில் கடலூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் ஓரணியில் தமிழ்நாடு என்ற இயக்கத்தை முன்னெடுக்கும் விதமாக சிதம்பரத்தில் புதன்கிழமை இரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கடலூர் தொகுதி எம்.எல்.ஏ ஐயப்பன் உள்ளிட்ட கட்சியினர் கலந்துகொண்டு, ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தை எவ்வாறு வெற்றிகரமாக செயல்படுத்த வேண்டும் என்பது குறித்தும் பொதுமக்களிடம்  சென்று எந்த நெருக்கடியான சூழலிலும் தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காப்பாற்றப்பட வேண்டும் என்று நினைக்கிறீர்களா? மகளிர் தங்கள் உரிமை தொகையை பெற்றிடவும், மீனவர்கள், நெசவாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் நலன் காக்கப்படும் நலத்திட்டங்களை நாம் தொடர்ந்து பெற்றிட வேண்டுமா?

97

மாணவர்களுக்கான கல்வி நிதி மாநில வளர்ச்சிக்காக வழங்கப்பட வேண்டிய நிதிப்பகிர்வு, நியாயமற்ற தொகுதி மறுவரையறை, கொடுமையான நீட் போன்ற நுழைவுத் தேர்வு போன்றவற்றிலிருந்து தமிழ்நாடு மற்றும் நம் இளைஞர்களின் எதிர்காலத்தை பாதுகாத்திட வேண்டுமா? டெல்லியின் அதிகாரத்திற்கு அடி பணியாமல், தமிழகத்தின் உரிமையை காக்கும் முதல்வர் ஸ்டாலின் நம் மாநிலத்தை ஆள வேண்டுமா? இவை அனைத்தும் சாத்தியப்பட மற்றும் நிலையான ஆட்சியினை வழங்கிட அனுபவ மிக்க ஸ்டாலின் போன்ற ஒரு தலைவரால் மட்டும் முடியும் என்று நம்புகிறீர்களா?  என்று கேள்விகளை எழுப்பி  திமுக செய்த சாதனைகளை கூறி திட்டத்தை வெற்றியடைய வேண்டும் என்று அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் பேசினார்.

Advertisment

99

இதனை தொடர்ந்து வியாழக்கிழமை வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள முட்டம் கிராமத்தில் வீடுவீட்ட்டாக சென்று  திட்டத்தைத் தொடங்கிவைத்து வீட்டில் உள்ளவர்களிடம் திமுக அரசு செய்த மக்கள் நலத்திட்டங்கள் குறித்து கேட்டறிந்து அவர்களை கட்சியில் இணைக்கும் பணியில் ஈடுபட்டார். இவருடன் மாவட்ட கழக பொருளாளர் எம்.ஆர்.கே.பி.கதிரவன், தொகுதி பொறுப்பாளர் விஜயன் ராமகிருஷ்ணன்,ஒன்றிய செயலாளர்கள் அ.முத்துசாமி, டி.ஜெயபாண்டியன்,பேரூர் செயலாளர் ஆர்.கணேசமூர்த்தி,மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஜி்.கார்த்திகேயன், பொதுக் குழு உறுப்பினர் கே.பி.ஆர்..பாலமுருகன் ,தொகுதி பார்வையாளர்கள் டி.வெங்கடாசலபதி உள்ளிட்ட கட்சியினர் கலந்துகொண்டனர்.