Advertisment

“ஆதவ் அர்ஜுனாவின் விமர்சனத்தைப் புறந்தள்ளுகிறேன்” - அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி!

masu-press-meet-2

சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை அருகில் சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட 2  பேருந்து நிறுத்தங்களை தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மக்களின் பயன்பாட்டுக்கு இன்று (01.01.2026) திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார். அப்போது அவரிடம், “கஞ்சா விவகாரம் தொடர்பாக ஆதவ் அர்ஜூனா உங்களைக் கடுமையாக விமர்சித்துள்ளார்” எனக் கேள்வி எழுப்பினர். 

Advertisment

அதற்கு அவர், “அவர்களுடைய விமர்சனத்தை எல்லாம் நான் புறந்தள்ளுகிறேன். என்றென்றால் 41 உயிர்கள் துடிதுடிக்க இறந்து கொண்டிருந்ததைப் பார்த்து ஓடி வந்த ஒரு மனிதாபிமானமற்ற அந்த ஒரு மிகப்பெரிய அறிவாளி பெருமக்கள் என்னை அறிவில்லாதவன் என்று சொல்வதை நான் அதை பொருட்படுத்தத் தயாராகவில்லை” எனத் தெரிவித்தார்.  அதனைத் தொடர்ந்து, “அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசு உத்தரப் பிரதேச மாநிலத்தோடு ஒப்பிட்டுப் பேசி இருக்கிறார். தமிழ்நாடு அரசு தோல்வி அடைந்துள்ளது. உத்தரப் பிரதேச அரசை விட 50% கடனை வந்து அதிகமாக வாங்கி இருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார் எனக் கூறினர். 

Advertisment

அதற்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன், “ஒன்றிய முன்னாள் அமைச்சர் பா. சிதம்பரம் மிகச் சரியாகப் பதிலளித்திருக்கிறார். அதாவது பொருளாதாரம் என்பது வளர்ச்சிக்கு ஏற்ப வாங்குகிற கடன் தான் பொருளாதாரம். அந்த கணக்குப் படி பார்த்தால் தமிழ்நாடு 2021இல் இருந்து இதுவரைக்கும் மிகச் சீராக இருக்கிறது. உத்தரப் பிரதேசத்தோடு இது ஒப்பிடுவது தவறு என்று ப. சிதம்பரம் போன்ற பொருளாதார வல்லுநர்கள் சொல்லி இருக்கிறார்கள். 

anbumani-angry

அன்புமணி, பா. சிதம்பரத்தின் பேட்டியை அவருடைய பேச்சைப் பார்த்துத் தெரிந்து கொள்வது என்பது தெரிந்து புரிந்து அதற்குப் பின்னால் பேசுவது என்பது நல்லது” எனத் தெரிவித்தார். மேலும், “எடப்பாடி பழனிச்சாமி சட்டம் ஒழுங்கு சீர்கேடு குறித்துக்  குற்றச்சாட்டு வைத்துள்ளார்” எனச் செய்தியாளர்கள் தெரிவித்தனர். அதற்கு அமைச்சர், “சட்டம் ஒழுங்கு எங்கே சீர்குலைந்துள்ளது.   என்ன சீர்குலைந்துள்ளது என்று சொல்ல வேண்டும். வெறுமனே காலையில் எழுந்த உடனே சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது என்று சொல்வதில் அர்த்தம் இல்லை. 

சட்ட ஒழுங்கு பற்றி எடப்பாடி பழனிச்சாமி சொல்வதற்குத் தார்மீக உரிமை இருக்கிறதா என்று தெரியவில்லை. ஏனென்றால் அவருடைய 4 ஆண்டுக் கால ஆட்சியில் தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் இறந்தது  மாதிரி நிறைய விஷயங்களைச் சொல்லலாம். சாத்தான்குளத்தில் நடைபெற்ற விஷயம். சட்ட ஒழுங்கு எந்த அளவுக்குச் சந்தி சிரித்தது என்று அவர் கொஞ்சம் மனசாட்சியோடு நினைத்துப் பார்த்தார் என்றால் இன்றைக்கு நடக்கிற இந்த ஆட்சி என்பது எந்த அளவுக்கு ஒரு மக்கள் நலன் சார்ந்த ஆட்சியாக இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்” எனப் பதிலளித்தார். 

Aadhav Arjuna anbumani edappadi k palaniswami Ma Subramanian P chidambaram
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe