ஊரக மற்றும் உள்ளாட்சிதுறை அமைச்சர் ஐ.பெரியசாமி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Advertisment

அண்மையில் அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் அவருடைய மகன், மகள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 11 மணி நேரத்திற்கு மேலாக சோதனை நடத்தி இருந்தனர். இந்த சோதனையில் பல்வேறு சொத்து ஆவணங்களை கைப்பற்றியதாக அமலாக்கத்துறை சார்பில் அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் வயிற்று வலி காரணமாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Advertisment

இன்று சின்னாளப்பட்டியில் நடைபெற இருந்த காலை உணவு திட்டம் விரிவாக்க நிகழ்ச்சியில் பங்கேற்க இருந்த நிலையில் ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரம் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகவே அவர் சென்று இருப்பதாக திமுக கட்சி வட்டாரங்களில் கூறப்படுகிறது.