Advertisment

“உயர்கல்வியின் கிரீடமாக அண்ணா பல்கலைக்கழகம் திகழ்கிறது” - அமைச்சர் கோவி. செழியன் பேச்சு!

govi-chizhiyan-pm

சென்னை அண்ணா பல்கலைக்கழக விவேகானந்தா அரங்கில் அண்ணா பல்கலைக்கழக கிண்டி பொறியியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழா நேற்று (05.02.2026)  நடைபெற்றது. இதில் தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் கலந்து கொண்டு 841 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். இப்பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் கோவி. செழியன் பேசுகையில், “உயர்தர தொழில்நுட்பக் கல்வியை வழங்குவதில் அண்ணா பல்கலைக்கழகம் ஒரு சிறந்த பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. மேலும், இது நாட்டின் பழமையான தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது. 

Advertisment

அண்ணா பல்கலைக்கழக கிண்டி பொறியியல் கல்லூரி 1794ஆம் ஆண்டு நிறுவப்பட்ட உலகின் மிகப் பழமையான நிறுவனங்களில் ஒன்றாகும். 4 பல்கலைக்கழகத் துறைகள், 16 தொகுதிக் கல்லூரிகள் மற்றும் 476 இணைப்புக் கல்லூரிகளை உள்ளடக்கியது. மேலும், கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி, மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரி (எம்.ஐ.டி) மற்றும் எஸ்.ஏ.பி. ( SAP) வளாகங்களில் உள்ள 36 துறைகளால் 32 இளங்கலை மற்றும் 88 முதுகலை படிப்புகள் வழங்கப்படுகின்றன. கிண்டி பொறியியல் கல்லூரியில் 1, 876 மாணாக்கர்கள் பயில்கின்றனர். அழகப்பா தொழில்நுட்ப கல்லூரியில் 516 மாணாக்கர்கள் பயில்கின்றனர். கட்டட கலை மற்றும் திட்டமிடல் பள்ளியில் 102 மாணாக்கர்கள் பயில்கின்றனர். மெட்ராஸ் தொழில்நுட்ப கழகத்தில் 894 மாணாக்கர்கள் பயில்கின்றனர்.

Advertisment

உலகளவில் 2026ஆம் ஆண்டுக்கான க்யூ.எஸ். (QS) உலகப் பல்கலைக்கழக தரவரிசையில், 465 வது இடம். இந்தியப் பல்கலைக்கழகங்களில் 10வது இடம். டைம்ஸ் உயர் கல்வியின் (THE) பல்துறை சார்ந்த அறிவியல் தரவரிசை 2025 இல், இந்தியாவில் முதலாவது இடம்; உலகளவில் 42 வது இடம். தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு (NIRF) தரவரிசைப் பட்டியல் 2025 இல் மாநில பல்கலைக்கழகங்களில் இரண்டாவது இடம். தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு, புதுமைப் பிரிவில் அண்ணா பல்கலைக்கழகம் 9 வது இடம். ஆராய்ச்சி நிறுவனங்களில் 2 வது இடம். இந்தியாவில் உள்ள பொறியியல் நிறுவனங்களில் 20வது இடம். இவ்வாறு பல்வேறு தரவரிசை பட்டியலில் அண்ணா பல்கலைக்கழகம் முதன்மை இடத்தை பிடித்து, நாட்டின் முதன்மையான பல்கலைக்கழகமாக திகழ்ந்து வருகிறது. தமிழ்நாடு உயர்கல்வியின் கிரீடமாக அண்ணா பல்கலைக்கழகம் திகழ்கிறது என்று சொன்னால் மிகையாகாது” எனத் தெரிவித்துள்ளார். 

college convocation convocation tn govt Higher education department Govi. Chezhian Anna University
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe