தமிழர் திருநாள் எனப்படும் பொங்கல் திருவிழா அடுத்த மாதம் வரவுள்ளதையொட்டி மக்கள் பொங்கல் கொண்டாட்டத்திற்காகத் தயாராகி வருகின்றனர். இதற்காக மக்கள் பேருந்து மற்றும் ரயில்களில் டிக்கெட் முன்பதிவுகள் செய்து வருகின்றனர். பொங்கல் விழாவானது தமிழ்நாடு மட்டுமல்லாமல் மலேசியா, சிங்கப்பூர், கனடா, ஆஸ்திரேலியா போன்ற பல்வேறு நாடுகளில் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
சில நாடுகளில் விடுமுறை அளிக்கப்படுவதோடு, கலாச்சார விழாவாகவும் அறிவித்துப் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியோடு கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் தமிழ்நாடு அரசும் மக்களுக்குப் பொங்கல் பொருட்கள், புத்தாடை, பணம் உள்ளிட்டவற்றை அளித்து வருவது என்பது வழக்கமான ஒன்றாகும். ஆண்டுதோறும் பொங்கல் பரிசுப்பொருட்களை அரசு வழங்கி வரும் நிலையில் இந்த ஆண்டு என்னென்ன பொருட்கள் வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே நிலவி வருகிறது. இந்த நிலையில் அதற்கு விடையளிக்கும் விதமாக ஒரு செய்தி பரவி வருகிறது.
பொங்கல் பரிசுத் தொகுப்பு ஜனவரி 10ஆம் தேதிக்குள் அனைவருக்கும் வழங்கப்படும் என்று கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார். பொங்கல் தொகுப்பு தயாராக உள்ளதாகவும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் விரைவில் வழங்கப்படும் எனவும் அமைச்சர் காந்தி கூறியுள்ளார். வழக்கமாகப் பொங்கல் தொகுப்பில் பச்சரிசி, வெல்லம், கரும்பு, புத்தாடை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுவது அனைவரும் அறிந்த விஷயமாக இருந்தாலும், இந்த முறை பரிசுத்தொகுப்பில் என்னென்ன பொருட்கள் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/27/gandhi-minister-pongal-gift-2025-12-27-23-40-13.jpg)