Advertisment

1.3 லட்சம் நிர்வாகிகள் கலந்துகொள்ளும் பிரமாண்டமான இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பு!

ve

திமுக இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகளுடன் சந்திப்பு திருவண்ணாமலையில் வன்னியந்தாங்காள் கிராமத்தில் டிசம்பர் 15 ஆம் தேதி மாலை நடைபெற உள்ளது. இதுக்குறித்து செய்தியாளர்கள் சந்தித்த திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர், பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வா.வேலு செய்தியாளர்களை சந்தித்தார். செய்தியாளர்களிடம் பேசும்போது, வடக்கு மண்டலம் என்பது சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை மாவட்டங்களை உள்ளடக்கியது. இங்கு கட்சி நிர்வாக அமைப்பு போல இளைஞர் அணியிலும் கிளை கழகம் வரை நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Advertisment

இளைஞர் அணி தொடக்கியபோது நமது இன்றைய கழகத் தலைவர் அன்றைய இளைஞரணி செயலாளராக இருந்தார், அதன்பின் தற்போது அமைச்சராக உள்ள வெள்ளக்கோயில் சாமிநாதன் அப்பொறுப்பில் இருந்தார். தற்பொழுது துணை முதலமைச்சராகவுள்ள உதயநிதி ஸ்டாலின் அப்பொறுப்பை ஏற்று உள்ளார். அவர் இளைஞர் அணி செயலாளர் பொறுப்புக்கு வந்த பின் இளைஞர் அணியில் புதிய மாற்றங்களை செய்துள்ளார், கழகத்தில் அமைப்பு ரீதியாக கிளைக் கழகம் வரை கட்டமைப்பு உள்ளது அதுப்போல இளைஞர் அணியிலும் கிளைக் கழகம் வரை நிர்வாகிகளை நியமனம் செய்து உள்ளார். அப்படி நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் கட்சியில் எப்படி செயல்படவேண்டும், தேர்தல் களத்தில் எப்படி செயல்படவேண்டும் என ஆலோசனை சொல்லவுள்ளார்கள், அதற்கான சந்திப்பு தான் நாளை நடைபெற உள்ளது.

Advertisment

இந்த கூட்டத்திற்கு திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினரும் இளைஞர் அணியின் தெற்கு மாவட்ட அமைப்பாளருமான அண்ணாதுரை, காவல்துறையிடம் அனுமதி கேட்டு மனு அளித்திருந்தார். நாங்கள் ஆளுங்கட்சியாக இருந்தாலும் காவல்துறை 17 விதிமுறைகளை போட்டு எங்களுக்கு மூன்று பக்க அளவில் கடிதம் தந்து உள்ளது. அதில் எத்தனை பேர் கலந்து கொள்ளப் போகிறார்கள்?, தீயணை தீயணைப்புத் துறையின் சான்றிதழ், பொதுப்பணி துறையின் சான்றிதழ், மருத்துவ முகாம்கள் அமைக்கவேண்டும் என குறிப்பிட்டுயிருந்தனர். அதன்பின் தீயணைப்பு துறை, பொதுப்பணித்துறை நேரடியாக வந்து மேடையின் உறுதித்தன்மையை ஆராய்ந்தனர், தீ பாற்றாமல் இருக்குமா? தீ பற்றினால் அதை அணைப்பதற்கான வழிகள் செய்யப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்து சான்றிதழ் வழங்கியுள்ளனர். அதேபோல் மருத்துவ அதிகாரிகள் சொன்னதன் அடிப்படையில் இரண்டு மருத்துவமனையில் இருந்து கூட்டம் நடைபெறும் இடத்தில் 150 மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மருத்துவப் பணிக்காக மருத்துவ தளவாடங்களுடன் வசதியை ஏற்படுத்தியுள்ளோம். மாநகராட்சி சார்பில் கழிவறை, குடிநீர் போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா? என கேள்வி எழுப்பினர், 50 இடங்களில் கழிப்பறை வசதிகள் செய்துள்ளோம், 5 ஆயிரம் லிட்டர் குடிதண்ணிர் வசதி தனியாக செய்துள்ளோம். அதேபோல் மின்வாரியம் உணவு பாதுகாப்பு துறை போன்றவர்களும் நேரடியாக ஆய்வு செய்து சான்றிதழ் தந்துள்ளனர்.

இந்த பொதுக்கூட்டம் 150 ஏக்கர் பரப்பளவில் நடக்கிறது, இந்த இடம் 2 லட்சம் பேர் உட்கார்ந்து பார்க்கும் அளவுக்கு இடவசதியும் உள்ளது. இக்கூட்டத்துக்கு ஒரு லட்சத்து 30 ஆயிரம் நிர்வாகிகள் வடக்கு மண்டலத்திலிருந்து மட்டும் வந்து கலந்து கொள்ள உள்ளனர், அதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளோம். வடக்கு மண்டலத்தில் உள்ள நிர்வாகிகள் இங்கு வந்து இளைஞர் அணி கலந்துக்கொள்ள 2700 பேருந்துகள், 500 வேன்கள் ஏற்பாடு செய்துள்ளோம், பாதுகாப்பு பணிக்காக 500 தன்னார்வலர்கள் ஈடுபட உள்ளார்கள். எங்களது தூய்மை அருணை அமைப்பில் இருந்து அதற்கான நபர்கள் தன்னார்வலாக பணியாற்றி உள்ளனர். நாங்கள் விதிமுறைகளை மீறாமல் இந்த இடத்தில் கூட்டத்தை நடத்த உள்ளளோம்.

கூட்டத்தில் கலந்து கொள்ளும் ஒவ்வொரு நிர்வாகிக்கும் தண்ணீர் பாட்டில், பர்பி, முந்திரி பருப்பு, குளுக்கோஸ் என 10 பொருட்கள் அடங்கிய கிட் வழங்கப்பட உள்ளது. அதேபோல் இளைஞர்கள் வெள்ளை பேண்ட் வெள்ளை டீ சர்ட் சீருடையாக அணிந்துக்கொண்டு வரவேண்டும் என கூறப்பட்டுள்ளது. மக்களுக்கு எந்த தொந்தரவும் இங்கே வந்து விடக்கூடாது என்பதற்காக இந்த மாநாட்டு மையத்திற்கு வருவதற்காக மூன்று வழிகள் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்து செய்யப்பட்டுள்ளன. அதனால் நெருக்கடியோ தள்ளுமுள்ளு போக்குவரத்து நெரிசல் போன்றவை ஏற்படாது. இந்த இடத்தை தேர்வு செய்தது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான் இதற்கு முன்பு இதே இடத்தில் கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு 25 ஆயிரம் வாக்குச்சாவடி முகவர்கள் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது, இரண்டு மாதத்திற்கு முன்பு 12,500 பேர் வடக்கு மண்டலத்தைச் சார்ந்த பி.எல்.ஏ2 கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றுள்ளது. தற்பொழுது இளைஞர் அணியினர் மட்டும் நிர்வாகிகள் கலந்து கொள்ளும் கூட்டம் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது என்றார்.

dmk e.va.velu uthayanithi stalin
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe