“திராவிட இலக்கியத்துக்கு முன்னால் தமிழை வளர்த்தது பக்தி இலக்கியம் தான்” - அமைச்சர் எ.வ.வேலு

102

வேலூர் மாவட்ட திமுக சார்பில் "ஓரணியில் தமிழ்நாடு" பொதுக்கூட்டம் வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே நடைபெற்றது. இதில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார். மேலும் சட்டமன்ற உறுப்பினர்கள், மேயர், துணை மேயர் உள்ளிட்ட கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில், “வேலூரில் தற்போது அரசு பென்ட்லெண்ட் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையாக திறக்கப்பட்டுள்ள பென்ட்லெண்ட் மருத்துவமனை மூலம் வட ஆற்காடு மாவட்டத்தில் உள்ள 23 தொகுதிகள் பயனடைந்தன. 2026-ல் நாம் எதிர்பார்ப்பதையெல்லாம் முதல்வர் செய்துகொடுப்பார். ஓரணியில் தமிழ்நாடு என்பது ஏதோ உறுப்பினர் சேர்க்கைக்காக மட்டும் அல்ல. தமிழக மக்கள் எல்லோரும் ஓரணியில் தான் இருக்கிறோம் என காட்டவும் தான். இந்த ஆட்சியில் தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் ஏதோ ஒரு வகையில் பயனடைந்துள்ளார்கள்.

தேர்தலில் வெற்றிபெற மட்டும் அல்ல ஓரணியில் தமிழ்நாடு மண்ணை, மானத்தை, மொழியை காக்கவும் தான். வடவர்கள் பல சூழ்ச்சிகளை அவிழ்க்கிறார்கள். சமஸ்கிருதம் காலம் எனக் கூறப்படும் வேதகாலம் தான் திராவிட காலத்துக்கு முத்தையது என மத்திய அரசு சொல்கிறது. கம்பராமாயணத்தை எழுதியது யார் என கேட்டால், சேக்கிழார் எனச் சொல்பவர்களுக்கு இது பற்றி என்ன தெரியும். திராவிட இலக்கியத்துக்கு முன்னால் தமிழை வளர்த்தது பக்தி இலக்கியம் தான். நான் பெரியார் கொள்கை கொண்டவன் என்பதால் அதை நான் மறுக்கமுடியாது. அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர். அரோகரா ரோகரா என மேடையில் முருகன் காவடி பாடலை பாடியும், கோவிந்தா... கோவிந்தா...” என்றும் பாடல் பாடிய அமைச்சர் மேடையில் தொண்டர் ஒருவர் கொடுத்த திருவாசகம் புத்தகத்தை காட்டி பேசினார்.

101

மேலும், “எங்களுக்கு என்னமோ முருகனை பற்றி தெரியாதாதுப்போல் பேசுகிறார்கள். அனைத்து ஆன்மீக தகவல்களையும் தெரிந்தவர் அமைச்சர் சேகர்பாபு. அரசுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டும், சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க வேண்டும் என நடத்தியது தான் முருகன் மாநாடு. தமிழத்தில் உள்ள கேந்திரி வித்யாலயா பள்ளியில் தமிழ் பாட ஆசிரியர்களே கிடையாது. இது வடவனின் போர் இல்லையா? மொழிதான் முக்கியம் என சோவியத் யூனியன் தலைவர் ஸ்டாலின் சொன்னார். அவரை மக்கள் இரும்பு மனிதன் என்றார்கள். அதுபோலத்தான் இங்கு தமிழை காக்கும் முதல்வர் ஸ்டாலின் ஒரு இரும்பு மனிதர்.

நம்மிடம் வாங்கும் ஜிஎஸ்டியில் தமிழுக்கு வெறும் சுமார் ரூ.170 கோடியும், யாருக்குமே புரியாத சமஸ்கிரதத்துக்கு ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளார்கள். யாராவது 2 இளைஞர்கள் சமஸ்கிரதத்தில் காதலிக்க முடியுமா? என கேள்வி எழுப்பிய அமைச்சர், மந்திரம் ஓதிக்காட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், எங்களையெல்லாம் தூங்கவிடாத தலைவர் எங்க தலைவர். அவர் உழைப்பை மட்டுமே போட்டுள்ளார். அவரை போலவே எங்களையும் உழைக்க சொல்கிறார்” என்றார்.

dmk admk ev velu Vellore
இதையும் படியுங்கள்
Subscribe