வேலூர் மாவட்டம் காட்பாடி காந்திநகரில் உள்ள இல்லத்தில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டியில், கொடநாடு விவகாரத்தில் என்ன பூச்சாண்டி காட்டினாலும் நான் அஞ்ச மாட்டேன் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளது குறித்து கேட்டதற்க்கு, அவருடைய நிலைமையை அவர் தெரிவிக்கிறார். ஆனால் சட்டம் என்ன சொல்கிறதோ அதை தமிழக அரசு செய்யும் என்றார். 

Advertisment

உச்சபட்ச அதிகாரம் மயக்கத்தில் மனிதாபிமானம் மாண்பு இல்லாமல் சட்டமன்றத்தில் அரசியல் ஆதாயம் தேடுகிறார் முதல்வர் என்று முதல்வரை கடுமையாக தாக்கி தவெக தலைவர் விஜய் பேசியுள்ளது குறித்து கேட்டதற்கு, கரூர் சம்பவத்தில் 41 பேர் இறப்பிற்கு காரணமாக இருந்துவிட்டு பாதிக்கப்பட்டவர்களின் வீட்டிற்கு சென்று நேரில் பார்க்காமல், ஆறுதல் சொல்லாமல் இருந்த அவர் மிகவும் மனிதாபிமானம் உள்ளவர், நாங்கள் மனிதாபிமானம் இல்லாதவரா? போங்க சார் என்றார்.

Advertisment

2026 தேர்தலில் திமுகவின் நாட்கள் எண்ணப்பட்டுள்ளது, என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு. அவர் பாவம் நல்ல மனிதர் அங்கு சொல்லிக் கொடுப்பதை சொல்லிவிடுவார் அவ்வளவுதான். டெல்லிக்குச் சென்ற செங்கோட்டையன் நான் யாரையும் சென்று சந்திக்கவில்லை என்று அன்று கூறினார், அதன் பிறகு கட்சியை விட்டு நீக்கிய உடன் பாஜக தன்னை அழைத்து பேசினார்கள் என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளாரே என்ற கேள்விக்கு, உண்மை வெளிவந்து விட்டது என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.