கோப்புப்படம்
வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள் மூலம் பெறப்பட்ட மனுக்கள் மீது சமூக பாதுகாப்பு, சமூக நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் துறையின் கீழ் 3 கோடியே 48 லட்சம் மதிப்பில் நலதிட்ட உதவிகள் மற்றும் வீட்டுமனை பட்டா வழங்கும் விழா மகிமண்டலத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர் துரைமுருகன் பங்கேற்று நல திட்ட உதவிகளை வழங்கினார். மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி உடன் இருந்தார்.
இந்த விழாவில் அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், “நீங்கள் எனக்கு போடும் ஓட்டு வீணாவது இல்லை. இந்த பகுதிக்கு அரசு தாலுக்கா மருத்துவமனை, அரசு கல்லூரி, தரமான சாலையை என அனைத்தையும் பார்த்து பார்த்து செய்து வருகிறேன். இன்னும் ஒன்னே ஒன்னுதா மிச்சம், சிப்காட் கொண்டு வந்துட்டேன். விரைவில் அதை கட்டி முடித்து வேலை வழங்கப்படும். நீங்க கேட்டிங்களா இலவச பேருந்து (Free bus), காலை உணவு, மகளீர் உதவித்தொகை ஆயிரம் வேணும்னு. எனக்கு வரலை உனக்கு வரலைனு சொல்ராங்க, இனி அவங்களுக்கும் கொடுக்க போறோம். இப்படி கேட்காமலேயே முதல்வர் செய்து வருகிறார்.
தூங்குற குழந்தைக்கும் தாய் ஓடிபோய் பால் கொடுப்பது போல தாயுள்ளத்தோடு முதல்வர் ஸ்டாலின் மக்களுக்கு செய்து வருகிறார். தேர்தல் முடிந்தாலும் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆட்சி தான் மீண்டும் வரும். அப்போது இந்த பகுதியில் தொழிற்பேட்டை கட்டி கொடுப்பேன் இது என் ஆசை. இந்த ஆட்சிக்கு நீங்க உறுதுணையாக இருக்க வேண்டும்" என்றார். இந்நிகழ்ச்சியில், மகிமண்டலம் ஊராட்சி மன்ற தலைவர் கோவில் கட்ட நிதி கேட்டதுக்கு, “இப்ப நிதி நாங்க வாங்குற நேரம்”, என சிரித்தவர் தேர்தலுக்காக சொன்னேன். ஒட்டுமொத்தமா ஓட்டு போடுங்க. நா வாக்கு கொடுத்தால் செய்வேன். செய்யலனா தெய்வம் எனக்கு கூலி கொடுக்கும். அதேதா உங்களுக்கும். ஓட்டுபோடலனா உங்களுக்கு தெய்வம் கூலி கொடுக்கும். நமக்குள் ஒரு அக்ரிமெண்ட் போட்டுக்கொள்வோம். நான் வென்ற உடன் கோவில் கட்ட நிதி ஒதுக்குகிறேன்” என அமைச்சர் துரைமுருகன் பேசினார்.
இதன் மூலம் மீண்டும் காட்பாடி தொகுதியில் நான் தான் போட்டியிடுவேன் என கூறியுள்ளார். அண்மை காலமாக வயது மூப்பு காரணமாக இவருக்கு சீட் கிடைக்காது என பேசப்பட்டது. முன்னதாக காட்பாடியில் நடைபெற்ற விளையாட்டு பொருட்கள் வழங்கும் விழாவில் பேசியவர். ஆரோக்கியமாக இருக்க விளையாட வேண்டும், SOUND BODY IN SOUND MIND என விவேகானந்தர் சொல்லுவார். யாருக்கு பலம் உள்ளதோ அவர்கள் வெற்றி பெறுவார்கள். கால்பந்து ( Football) ஆடும் போது மோட்சம் பெருவீர்கள் என்றும் ஆவர் கூறியுள்ளார். விவேகானந்தர் பக்திமானாக இருந்தாலும் உடற்பயிற்சி ஆர்வம் கொண்டவராகவும் இருந்தார். தேர்தலுக்கு பிறகு நாங்க தா ஆட்சிக்கு வருவோம் அப்போதும் எல்லா கிராமங்களுக்கும் விளையாட்டு பொருட்களை வழங்குவோம் என அமைச்சர் துரைமுருகன் பேசினார்.
Follow Us