Advertisment

‘கோவை சுல்தான்பேட்டை ஒன்றிய செயலாளர் நீக்கம்’ - அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு!

anna-arivalayam

கோவை மாவட்டம் சூலூர், கிணத்துக்கடவு மற்றும் வால்பாறை ஆகிய 3 சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகளை திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின், திமுக தலைமை அலுவலகமான சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில், ‘உடன் பிறப்பே வா’ என்ற தலைப்பில் நேற்று (18.11.2025) சந்தித்து ‘ஒன் டு ஒன்’ ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின் போது ஒவ்வொரு தொகுதியிலும் திமுகவின் பலம், பலவீனம் குறித்தும் வேட்பாளர் தேர்வு தொடர்பாகவும், சட்டமன்ற தேர்தல் பணிகளை முடுக்கி விடும் வகையில் ஒன் டூ ஒன் ஆலோசனை நடைபெற்றது. 

Advertisment

அப்போது இந்த 3 தொகுதிகளில், கூடுதல் கவனம் செலுத்தி, உட்கட்சி மற்றும் கோஷ்டி பூசல்களைக் கலைந்து வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவை வெற்றி பெற வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளிடம் தெரிவித்திருந்தார். அதோடு கட்சி நிர்வாகிகளின் கருத்துக்களை தனித்தனியாகக் கேட்டறிந்த முதல்வர் மு.க. ஸ்டாலின், தொகுதிகளில் கட்சியை மேலும் பலப்படுத்தி அங்கு வெற்றி பெறுவதற்கான அனைத்து வியூகங்களையும் வகுக்க வேண்டும் என அவர் கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கியிருந்தார். மேலும் முதல்வர் மு.க. ஸ்டாலின், “கடந்த சட்டமன்ற தேர்தலில் கோவை மாவட்டத்தில் திமுக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை. 

Advertisment

அதிமுக கூட்டணி அனைத்து தொகுதியிலும் வெற்றி பெற்றது. எனவே வரும் சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக அல்லது கூட்டணி கட்சிகள் கோவை மாவட்டத்தில் வெற்றி பெற வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார். அதோடு கோவை மாவட்டத்திற்கு மண்டல பொறுப்பாளராக உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் இதற்கான உத்தரவை முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறப்பித்திருந்தார். கொங்கு மண்டலத்தில் கடந்த முறை அதிமுக மற்றும் அதன் கூட்டணிகள் பெரும்பான்மையான சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. 

durai-murugan-1

இந்நிலையில் கோவை சுல்தான்பேட்டை திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் பி.வி. மகாலிங்கத்தின் பதவியை பறித்து திமுக தலைமை அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இதற்கான உத்தரவை அக்கட்சியின் பொதுச்செயலாளரும், மூத்த அமைச்சருமான துரைமுருகன் வெளியிட்டுள்ளார். பி.வி. மகாலிங்கம் அதிமுகவினருடன், அரசியல் ரீதியாகத் தொடர்பில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக பி.வி. மகாலிங்கம், வகித்து வந்த சுல்தான்பேட்டை தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் என்ற பதவி பறிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம் சுல்தான்பேட்டை திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் பதவிக்கு ஆர். ரமேஷ் என்பவர் தற்போது நியமிக்கப்பட்டுள்ளார். 

dmk :Durai Murugan anna arivalayam Coimbatore
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe