அமைச்சர் துரைமுருகன் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திமுக பொதுச் செயலாளராகவும், தமிழக அமைச்சரவையில் மூத்த அமைச்சராகவும் (நீர்வளத்துறை அமைச்சர்) பதவி வகித்து வருபவர் துரைமுருகன் (வயது 87). இந்நிலையில் இவருக்கு திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாகச் சென்னை கிரிம்ஸ் ரோட்டில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அமைச்சர் துரைமுருகன் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “அமைச்சர் துரைமுருகன் (87 வயது), கால் வலி காரணமாக மேலதிக பரிசோதனைக்காக கிரீம்ஸ் ரோடு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை சீராக உள்ளதுடன், சிகிச்சை அளிக்கும் மருத்துவர் குழுவினால் அவர் உள்நோயாளிகள் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வலி நிவாரண மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன மற்றும் அடுத்த சில நாட்களுக்கு ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/11/durai-murugan-sad-2026-02-11-08-09-21.jpg)