Advertisment

‘திமுக நிர்வாகிகளுக்குப் பயிற்சி கூட்டம்’ - அமைச்சர் துரை முருகன் அறிவிப்பு!

durai-murugan

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு (2026) சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். அந்த வகையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் சுற்றுப்பயணம், தேர்தல் பரப்புரை என தீவிரம் காட்டி வருகின்றனர். மற்றொருபுறம் சட்டப்பேரவைத் தேர்தலுக்குத் தேர்தல் ஆணையம் முழு வீச்சில் தயாராகி வருகிறது. அதற்கான பணிகளும் தொடங்கியுள்ளன. 

Advertisment

இந்நிலையில் தமிழ்நாடு தலைகுனியாது “என்  வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” பயிற்சிக் கூட்டம் நடைபெற உள்ளதாக அமைச்சரும், திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் திட்டமிடலின்படி வருகின்ற சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் பல்வேறு முன்னெடுப்புகளை திமுக மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டை வளைத்திட முயற்சிக்கும் வஞ்சக சூழ்ச்சி கொண்ட ஒன்றிய பாஜக அரசின் முன்பு "தமிழ்நாடு தலைகுனியாது" என்ற பரப்புரையை திமுக தொடங்கவுள்ளது. 

Advertisment

அதன் ஒருபகுதியாக ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் திமுகவின் வெற்றியை உறுதி செய்யும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் "என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி" என்ற முன்னெடுப்புக்காக ” திமுக மாவட்ட செயலாளர்கள் - மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினர்கள் - சட்டமன்ற உறுப்பினர்கள் - தொகுதி பார்வையாளர்கள் - தலைமை செயற்குழு உறுப்பினர்கள் - ஒன்றிய, நகர, பகுதி, பேரூர்க் கழக செயலாளர்களுக்கான பயிற்சிக் கூட்டம்” வரும் 28.10.2025 செவ்வாய்கிழமை, காலை 9.00  மணி அளவில் மாமல்லபுரம், ஈ.சி.ஆர்.சாலையில் உள்ள தனியார் கூட்டரங்கில் (Confluence Hall)  நடைபெறும். இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் - மாநிலங்களவை  மற்றும் மக்களவை உறுப்பினர்கள் - சட்டமன்ற உறுப்பினர்கள் - தொகுதி பார்வையாளர்கள் - தலைமை செயற்குழு உறுப்பினர்கள் - ஒன்றிய, நகர, பகுதி, பேரூர்க் திமுக செயலாளர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார். 

Assembly Election 2026 training Announcement :Durai Murugan dmk
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe