கடந்த 1990களில் பாஜகவில் இருந்த மைத்ரேயன், தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். அதனைத் தொடர்ந்து அதிமுகவில் அதிமுக அமைப்புச் செயலாளராகவும் பதவி வகித்து வந்தார். அதோடு நாடாளுமன்ற எம்.பி.யாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றி வந்தார். அதன் பின்னர் அதிமுகவில் பிளவு ஏற்பட்டபோது, அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளரான ஓ. பன்னீர்செல்வம் அணியின் ஆதரவாளராகச் செயல்பட்டு வந்தார். 

Advertisment

இதனையடுத்து பா.ஜ.க.வில் இனைந்தார். அங்கு அவர் அக்கட்சியின் செயற்குழு உறுப்பினராகச் செயல்பட்டு வந்தார். அதனைத் தொடர்ந்து  மைத்ரேயன் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி முன்னிலையில், மைத்ரேயன் மீண்டும் அதிமுகவில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி (12.09.2024) இணைத்துக் கொண்டார். 

Advertisment

இத்தகைய சூழலில் தான் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு..க. ஸ்டாலின் முன்னிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 13ஆம் தேதி (13.08.2025) மைத்ரேயன் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார். இந்நிலையில் திமுக கல்வியாளர் அணியின் துணைத் தலைவராக மைத்ரேயன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார்.  

முன்னதாக மதுரையில் கடந்த ஜூன் மாதம் 1ஆம் தேதி நடைபெற்ற திமுக பொதுக்குழுவில் திமுக சட்ட விதிப்படி, திமுக கல்வியாளர் அணி மற்றும் மாற்றுத்திறனாளிகள் அணி அமைக்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து கல்வியாளர் அணியின் தலைவராகப் புலவர் ந. செந்தலை கவுதமன், செயலாளராகத் தமிழச்சி தங்கப்பாண்டியன் எம்.பி. ஆகியோர் நியமிக்கப்பட்டனர். அதே போன்று மாற்றுத்திறனாளிகள் அணித் தலைவராக ரெ. தங்கம், செயலாளராக டி.எம்.என். தீபக் ஆகியோர் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Advertisment