Advertisment

“881 கௌரவ விரிவுரையாளர் பணியிடங்கள் நிரப்பப்படும்” - அமைச்சர் கோவி. செழியன் தகவல்!

govi-chezhiyan

அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் 881 கௌரவ விரிவுரையாளர்கள் தற்காலிகமாக பணியமர்த்தப்படவுள்ளனர் என தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து அமைச்சர் கோவி. செழியன்  தெரிவிக்கையில், “கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களில் உடனடியாக நிரந்தர ஆசிரியர்களை பணியமர்த்த இயலாத நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தலுக்கிணங்க மாணாக்கர்களுக்கான கல்வி கற்றலில் தொய்வு ஏற்படாமல் இருக்க ஏற்கனவே 574 இடங்களுக்கு தற்காலிக கௌரவ விரிவுரையாளர்கள் தேர்வு செய்ய விளம்பரம் வெளியிடப்பட்டது. 

Advertisment

அதில் 516 பேர் தற்காலிகமாக பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக, மேலும், 881 கௌரவ விரிவுரையாளர்களை தற்காலிகமாக பணியமர்த்துவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 38 பாடப்பிரிவுகளில், 881 தற்காலிக கௌரவ விரிவுரையாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இது குறித்த முழு விவரங்கள் www.tngasa.org என்ற இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த  இணையதளம் வாயிலாக இன்று (24.09.2025) முதல் தகுதியுள்ள நபர்கள் தங்களது விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். விண்ணப்பங்கள் பதிவு செய்ய இறுதி நாள் 08.10.2025 ஆகும். 

மேலும். 21.07.2025ஆம் செய்தி அறிவிப்பின்படி, ஏற்கனவே கௌரவ விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பித்தவர்கள் தற்போது விண்ணப்பிக்கும் போது, தங்களின் விண்ணப்ப எண்களை பதிவு செய்து, விண்ணப்ப கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு பெறலாம். தமிழ்நாடு அரசின் நெறிமுறைகளைப் பின்பற்றியும், கல்வித்தகுதி மற்றும் நேர்முகத் தேர்வு மதிப்பீடுகளின் அடிப்படையிலும் கௌரவ விரிவுரையாளர்கள் தெரிவு செய்யப்படுவர். தகுதியுள்ள நபர்கள் இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

tn govt colleges JOB VACANCY Govi. Chezhian govt arts and science college Lecturer
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe