Minister announces boycott of Governor's graduation ceremony Photograph: (dmk)
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடைபெறும் 87 வது பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்கப் போவதாக தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 87-வது பட்டமளிப்பு விழா, பிப்ரவரி 2-ந் தேதி மதியம் 12 மணியளவில் நடைபெறுகிறது. இவ்விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்க உள்ளார். இந்த விழாவில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் கலந்துகொள்வதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் பிப் 1-ந்தேதி வடலூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வந்த தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தமிழக ஆளுநர் தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு விரோதமாக செயல்படுகிறார். எனவே பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை என செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
Follow Us