2026ஆம் ஆண்டுக்கான 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணையை பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று (04-11-25) வெளியிட்டார்.

Advertisment

இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “தமிழகத்தில் அடுத்தாண்டு மார்ச் 2ஆம் தேதி மார்ச் 26ஆம் தேதி வரை 12 பொதுத் தேர்வு நடைபெறும். இதற்கு முன்பாக இதற்கான பிராக்டிக்கல் தேர்வு பிப்ரவரி 9ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டு பிப்ரவரி 14ஆம் தேதி வரை நடைபெறும். இந்த தேர்வுக்கான முடிவுகள் மே 5, 2026 அன்று வெளியிடப்படும்.

Advertisment

10ஆம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு மார்ச் 11ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டு ஏப்ரல் 6ஆம் தேதி வரை நடைபெறும். இதற்கான பிராக்டிக்கல் தேர்வு பிப்ரவரி 23ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டு பிப்ரவரி 28ஆம் தேதி வரை நடைபெறும். இந்த தேர்வுக்கான முடிவுகள் மே 20, 2026 அன்று வெளியிடப்படும். 12ஆம் வகுப்பை பொறுத்தவரைக்கும் கிட்டத்தட்ட 8 லட்சத்துக்கு 7 ஆயிரம் மாணவர்களும், 10ஆம் வகுப்பை பொறுத்தவரைக்கும் 8 லட்சத்து 70 ஆயிரம் மாணவர்களும் தேர்வு எழுத இருக்கிறார்கள்” என்று அறிவித்தார்.