நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களாக சேர வேண்டும் என்றால் அவர்கள் கட்டாயம் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) எழுதி வெற்றிபெற வேண்டும் என கடந்த 2009ஆம் ஆண்டு கட்டாய கல்வி உரிமைச் சட்டம் அடிப்படையில் கொண்டு வரப்பட்டது. அதற்குப் பிறகு சில நியமனங்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதாமலே சில மாநிலங்களில் ஆசிரியர்கள் பணியில் சேர்ந்துள்ளனர். அவ்வாறு சேர்ந்தவர்கள் பணியில் சேர்ந்து பணியாற்றி வந்தாலும் கட்டாயம் ஆசிரியர் தகுதித் தேர்வினை எழுதி வெற்றி பெற்றுத் தான் பணியில் தொடர முடியும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அதே சமயம் 2009ஆம் ஆண்டு இந்த சட்டம் வருவதற்கு முன்பாகவே பணியில் சேர்ந்தவர்களுக்கு இந்த விதி பொருந்தாது. பல்வேறு சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு ஓய்வுபெற 5 ஆண்டுகளுக்குள் மட்டுமே இருந்தால் அவர்கள் ஆசிரியர்களாக தொடரலாம். ஆனால் 5 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றக்கூடிய வாய்ப்பிருக்கும் ஆசிரியர்கள் கட்டாயம் ஆசிரியர் தகுதித் தேர்வை எழுதி வெற்றிபெற வேண்டும். இல்லையென்றால் அவர்களை வேலையிலிருந்து வெளியேற்றலாம். அல்லது கட்டாய ஓய்வு பெறலாம் என வழக்கை விசாரித்த நீதிபதி திபான்கர் தத்தா தீர்பளித்திருந்தார். மேலும் சிறுபான்மை நிறுவனத்தில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வை கட்டாயப்படுத்த முடியுமா?. அல்லது நடைமுறை உரிமைகளை பாதிக்குமா என்பதை விசாரிக்க உயர் குழுவுக்கு வழக்கை நீதிபதி திபான்கர் தத்தா பரிந்துரைத்திருந்தார்.
மற்றொருபுறம் உச்ச நீதிமன்ற உத்தரவால் தமிழகத்தில் பணியாற்றும் சுமார் 1.75 லட்சம் ஆசிரியர்கள் பாதிக்கப்படுவார்கள் என ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்திருந்தன. இதனையடுத்து ஆசிரியர் சங்கங்களை அழைத்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தியிருந்தார். இதனையடுத்து பணியில் உள்ள ஆசிரியர்கள் தங்களது பணியில் தொடர்பவதற்கு எதுவாக தமிழக அரசு சார்பில் டெட் தேர்வு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுத் தாக்க்ல் செய்யப்பட்டது. இந்நிலையில் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலினை இன்று (22.11.2025) சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/11/22/sc-2025-11-22-15-49-49.jpg)
அப்போது 2011ஆம் ஆண்டிற்கு முன்பு பணி நியமனம் பெற்று தற்போது ஆசிரியராக பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களும் கட்டாயம் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து தமிழ்நாடு அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது குறித்தும், ஆசிரியர்களிடையே ஏற்பட்டுள்ள அச்ச உணர்வினை போக்கும் வகையில் நேற்று (21.11.2025) தனது தலைமையில் பல்வேறு ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது குறித்தும், அக்கூட்டத்தில் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் தெரிவித்த கருத்துகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் தெரிவித்தார்.
மேலும் இது குறித்து எடுக்கவேண்டிய தொடர் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை பெற்றார். அப்போது முதலமைச்சர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் ஆசிரியர்களின் நலன் காத்திட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், திராவிட மாடல் அரசு எந்த சூழ்நிலையிலும் ஆசிரியர்களைக் கைவிடாது என்றும் உறுதியளித்தார். இச்சந்திப்பின்போது, நாடாளுமன்ற உறுப்பினரும், மூத்த வழக்கறிஞருமான பி. வில்சன் உடனிருந்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/22/wilson-anbil-mks-2025-11-22-15-49-10.jpg)