கர்நாடகாவில் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விடப்படும் நீரின் அளவானது அதிகரித்து வரும் நிலையில், மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
நேற்றைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 117.93 அடியாக இருந்த நிலையில், ஒரே நாளில் இன்று 119.22 அடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 80,984 கனஅடியாக இருந்த நிலையில் இன்று 68,007 கனஅடியாக நீர்வரத்து குறைந்துள்ளது. அதேபோல் மேட்டூர் அணையிலிருந்து வினாடிக்கு 26 ஆயிரம் கன அடி தண்ணீர் பாசனத்திற்கு திறக்கப்படுகிறது.
அணையின் தற்போதைய நீர் இருப்பு 92.23 டிஎம்சியாக உள்ளது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தால் மேட்டூர் அணை அதனுடைய வரலாற்றில் 45 ஆவது ஆண்டாக நிரம்பி மேட்டூர் அணையில் உபரி நீர் திறக்க வாய்ப்புள்ளதாக நீர்வளத்துறை தெரிவித்துள்ளது.