Mettur Dam scores a hat-trick Photograph: (mettur dam)
அண்மையாகவே கர்நாடக காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக தமிழகத்திற்கு திறந்து விடப்படும் நீரின் அளவானது அதிகரித்து வந்தது. இதனால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்தும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் நடப்பாண்டிலேயே மூன்றாவது முறையாக மேட்டூர் அணையானது முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் மேட்டூர் அணையில் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்றைய நிலவரப்படி மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு 22,500 கன அடியிலிருந்து 31 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது .நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் பட்சத்தில் முழுவதுமாக நீர் வெளியேற்றப்பட வாய்ப்புள்ளதாக மேட்டூர் அணை நீர்வளத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அணை மற்றும் சுரங்க மின்நிலையங்கள் வழியாக 22 ஆயிரம் கனஅடியும், நீர்போக்கி வழியாக 8,500 கன அடியும் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.