Mettur Dam is waiting to be filled again - Flood warning for coastal residents Photograph: (salem)
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கர்நாடகாவின் கபிணி, கே.ஆர்.எஸ் அணைகளில் நீர் திறப்பு அதிகரித்துள்ளது. இந்த காரணமாக மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. நடப்பாண்டிலேயே மேட்டூர் அணை நான்குமுறை முழு கொள்ளளவை எட்டிய நிலையில் இன்று மாலைக்குள் மீண்டும் மேட்டூர் அணை நிரப்ப வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தற்போதைய நிலவரப்படி 117 அடியாக உள்ள நிலையில் விரையில் முழு கொள்ளளவான 120 அடியை எட்ட உள்ளது. தற்போது மேட்டூர் அணையில் இருந்து 35,000 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டும் பட்சத்தில் அணையில் இருந்து 50,000 கன அடி முதல் 70,000 கன அடி வரை நீர் திறக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதனால் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், தஞ்சை, திருச்சி, திருவாரூர் உள்ளிட்ட 12 காவிரி டெல்டா மாவட்ட ஆட்சியர்களும் தயார் நிலையில் இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையை சுற்றியுள்ள காவிரி கரையோர மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் வருவாய்த் துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.