அண்மையாகவே கர்நாடக காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக தமிழகத்திற்கு  திறந்து விடப்படும் நீரின் அளவானது அதிகரித்து வந்தது. இதனால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்தும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கடந்த 20/07/2025 அன்று நடப்பாண்டிலேயே மூன்றாவது முறையாக மேட்டூர் அணையானது முழு கொள்ளளவை எட்டியது. இதனால் மேட்டூர் அணையில் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது.  20/07/2025  நிலவரப்படி மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு 22,500 கன அடியிலிருந்து 31 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்பட்டது .

இந்நிலையில் இன்று (23/07/2025) தற்போது மேட்டூர் அணை நான்காவது முறையாக நிரம்பியுள்ளது.16 கண் மதகு வழியாக உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் பட்சத்தில் முழுவதுமாக நீர் வெளியேற்றப்பட வாய்ப்புள்ளதாக மேட்டூர் அணை நீர்வளத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.