Advertisment

‘டித்வா’ புயல் : ‘அதி கனமழைக்கு வாய்ப்பு’ - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

ditwah-cyclone-model

வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அந்த வகையில் டெல்டா மற்றும் தென் மாவட்டங்கள் உட்படத் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. அதே போன்று புதுச்சேரியிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் வானிலை ஆய்வு மையத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கையை ஒட்டிய பகுதியில் நேற்று (27.11.2025) உருவான டித்வா புயலின் வேகம் குறைந்து வருகிறது. 

Advertisment

இன்று (28.11.2025) நள்ளிரவு 02:30 மணி நிலவரப்படி மணிக்கு 10 கி.மீ வேகத்தில் நகர்ந்த நிலையில் தற்போது புயலின் வேகம் குறைந்து 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. அதாவது கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 7 கி.மீ வேகத்தில் நகர்ந்து புதுச்சேரிக்குத் தென்கிழக்கே 440 கி.மீ. தொலைவிலும் சென்னையிலிருந்து தென்கிழக்கே 540 கி.மீ. தொலைவிலும் தற்போது மையம் கொண்டுள்ளது. இலங்கையின் கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள இந்த புயலானது மேலும் வடக்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து வட தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரையை நோக்கி நவம்பர் 30ஆம் தேதி அதிகாலையில் கரையைக் கடக்கும். 

Advertisment

இந்த புயலானது சென்னையில் இருந்து நீண்ட தொலைவில் இருப்பதன் காரணமாகவும், இலங்கை கடற்பரப்பில் இருந்து நகர்ந்து வருவதன் காரணமாக இன்றைக்கு டெல்டா மாவட்டங்களில் ஓரிரு மாவட்டங்களில் அதி கனமழைக்கு எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. அதோடு நாளை (29.11.2025) சென்னையைப் பொறுத்தவரையில் அதி கனமழைக்கான வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

heavy rain north east mansoon Indian Meteorological Department cyclone bay of bengal Sri Lanka cyclone ditwah
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe