Messi arrives in India and fans give him a rousing welcome
பிரபல கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி, 3 நாள் பயணமாக இன்று (13-12-25) அதிகாலை இந்தியா வந்தடைந்தார்.
அர்ஜெண்டீனா நாட்டைச் சேர்ந்த லியோனல் மெஸ்ஸி, கால்பந்து போட்டியின் ஜாம்பவனாக திகழ்கிறார். இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் ஏராளமானவர்கள் உள்ளனர். இந்த நிலையில், மெஸ்ஸி 3 நாள் பயணமாக இந்தியா வருவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி அவர், அமெரிக்காவில் இருந்து துபாய் வழியாக கொல்கத்தா விமான நிலையத்துக்கு இன்று அதிகாலை வந்தார். அப்போது விமான நிலையத்தில் ஏராளமான ரசிகர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கொல்கத்தாவில் இன்று நடைபெறும் நட்பு ரீதியான கால்பந்து போட்டியில் பங்கேறும் மெஸ்ஸி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உடன் சந்தித்துப் பேசவுள்ளார். அதனை தொடர்ந்து ஹைதராபாத்துக்கு சென்று அங்கு நடைபெறும் நட்பு ரீதியிலான கால்பந்து போட்டியில் பங்கேற்கவுள்ளார். அப்போது, தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை சந்தித்துப் பேச இருக்கிறார். இதையடுத்து மும்பைக்குச் சென்று இந்திய கிரிக்கெட் கிளப்பில் நடைபெறும் படேல் கோப்பை நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளார். அதனை தொடர்ந்து டிசம்பர் 15ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச இருக்கிறார்.
இதனிடையே, ஹைதராபாத்தில் மெஸ்ஸியுடன் புகைப்படம் எடுக்க ரூ.9.95 லட்சம் நிர்ணயக்கப்பட்டுள்ளது. அதாவது, ஹைதராபாத்தின் ஃபலக்னுமா அரணமனையில் இன்று (13-12-25) மெஸ்ஸியை சந்தித்து எடுக்கும் வகையில் டிஸ்டிர் ஆப் (District App) 100 டிக்கெட்டுகளுக்கான முன்பதிவை தொடங்கியிருந்தது. அதில், மெஸ்ஸியுடன் புகைப்படம் எடுக்க விரும்பும் ரசிகர்கள் ரூ.9.95 லட்சம் மற்றும் ஜி.எஸ்.டி கட்டணமாக செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தகக்து.
Follow Us