திருமணமான 5 மாதத்திலேயே இளம்பெண் மர்ம மரணம்; கடற்படை அதிகாரி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்கள்!

dowry

merchant navy officer wife hang in uttar pradesh and family accused over dowry

வணிக கடற்படை அதிகாரியை திருமணம் செய்த 5 மாதத்திலேயே 26 வயது பெண் ஒருவர் மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவைச் சேர்ந்தவர் 26 வயதான மது சிங் என்ற பெண். இவர் கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி வணிக கடற்படை அதிகாரியான அனுராக் சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஹாங்காங்கை தளமாகக் கொண்ட ஒரு கப்பல் மேலாண்மை நிறுவனத்தில் இரண்டாவது அதிகாரியாக பணியாற்றி வரும் அனுராக், திருமணத்தின் போது வரதட்சணையாக ரூ.15 லட்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இவ்வளவு தொகையை கொடுக்க முடியாமல் மதுவின் குடும்பத்தினர் தடுமாறி வந்துள்ளனர். இதற்கிடையில், வரதட்சணை தொகையை கொடுக்காததால் மதுவை அனுராக் தொடர்ந்து அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இதில் கோபப்பட்டு மது தனது பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளார். அதன் பின்னர், அனுராக் கேட்ட வரதட்சணையை மதுவின் குடும்பத்தினர் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும் அனுராக், மதுவை தனது வீட்டிற்கு அழைத்து வந்து தொடர்ந்து சித்ரவதை செய்து வந்துள்ளார். 

இந்த நிலையில், நேற்று முன் தினம் (04-08-25) தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் மது பிணமாக கிடந்தார். இது குறித்து உடனடியாக மதுவின் குடும்பத்தினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர், வீட்டிற்கு வருவதற்கு மதுவின் உடலை கீழே இறக்கி வைத்துள்ளனர். இதில் சந்தேகமடைந்த மதுவின் குடும்பத்தினர், மதுவை அனுராக் தான் கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டுள்ளார் என்று போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் மதுவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனை செய்ததில், தூக்குப்போட்டு தான் மரணம் நிகழ்ந்தது என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து, மதுவின் குடும்பத்தினர் கொடுத்த புகாரின் பேரில் அனுராக்கை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உயிரிழந்த மதுவின் சகோதரி பிரியா கூறுகையில், ‘மது ஒரு துடிப்பான பெண். அவள் மற்றவர்களுடன் பேசுவதை அனுராக் விரும்பவதில்லை. அதனால் நண்பர்களிடமோ எங்களிடமோ பேசக்கூடாது என்று நிபந்தனை விதித்துள்ளார். அனுராக் ஊருக்கு வெளியே இருக்கும் போது மட்டுமே மதுவிடம் நாங்கள் பேசுவோம். காரணமே இல்லாத சிறு சிறு விஷயங்களுக்கு கூட மதுவை அனுராக் அடித்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார். தன்னுடன் மது குடிக்கும் வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளார். மது யாருடம் பேசுகிறார் என்பதை சோதிக்க அவளுடைய செல்போன், அழைப்பு பதிவுகள் உள்ளிட்டவற்றை சரிபார்ப்பார். நான் அவளுடன் பேசியதற்காக நானும் அவளும் தன்பாலின ஈர்ப்பாளர்கள் கூட அவர் சொன்னார். கடைசியாக இருவரும் வெளியே காரில் சென்று கொண்டிருந்த அனுராக் தன்னை அடித்ததாக என்னிடம் மது கூறினாள். சாலையில் குழிகள் இருந்ததால் வாகனத்தை இடதுபுறமாக மது திருப்பியுள்ளார். சில ஆண்களைக் கண்டதால் தான் இடதுபுறமாக திருப்பியதாகக் கூறி அதற்கு அனுராக் அவளை அடித்துள்ளார்’ என்று கூறினார்.

மதுவின் தந்தை கூறுகையில், ‘என் மகள் கர்ப்பமாக இருந்தாள், ஆனால் அவளை கருக்கலைப்பு செய்ய கட்டாயப்படுத்தினான். அனுராக் திருமணத்தை மீறிய உறவில் இருந்துள்ளார். சமீபத்தில் தனது முன்னாள் காதலியுடன் ஒரு ஹோட்டலில் தங்கியுள்ளார். ஆகஸ்ட் 3ஆம் தேதி அனுராக் தன்னைத் தாக்கியதாக மது பிரியாவிடம் கூறியுள்ளார். ஆகஸ்ட் 4ஆம் தேதி அனுராக் எனக்கு போன் செய்து என் மகள் தற்கொலை செய்துகொண்டதாக கூறினார். அவர் என் மகளை கொன்றுவிட்டதாக நான் நம்புகிறேன்’ என்ற வேதனையுடன் கூறினார். இந்த சம்பவம் குறித்து போலீசார், அனுராக்கிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

dowry navy uttar pradesh
இதையும் படியுங்கள்
Subscribe