சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் தமிழகத்தின் பிரதான கட்சிகள், எதிர் கட்சிகளிலிருந்து வருபவர்களை தங்கள் கட்சியில் இணைத்துக் கொள்கிறார்கள். அந்த வகையில், அதிமுக பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிசாமியின் சென்னை, பசுமைவழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில்,  100-க்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் தங்களை இணைத்துக்கொண்டனர்.

Advertisment

அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் தனபால் ஏற்பாட்டில்,  செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தவெக, விசிக, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் அதிமுகவில் இணைந்துள்ளனர். கட்சியில் புதிதாக இணைந்தவர்களுக்கு இபிஎஸ் வாழ்த்துகள் கூறி வரவேற்று, "தேர்தல் பணிகளில் ஆர்வமுடன் பங்கெடுத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு என்ன தேவையோ அதனை தலைமைக்கழகத்தில் சொல்லி பெற்றுக் கொள்ளுங்கள். அதிமுகவின் வெற்றிக்கு உழையுங்கள். அதற்கு தகுந்த பலன் நிச்சயம் கிடைக்கும்" என்று எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை தெரிவித்தார் 

Advertisment