தென் கொரியா நாட்டின் புசான் நகரில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீன அதிபர் ஜீ ஜின்பிங் இடையேயான பேச்சுவார்த்தை இன்று (30.10.2025) நடைபெற்றது. இரு நாடுகள் இடையேயான பரஸ்பர வரி விதிப்புகள், அரிய வகை கனிமங்கள் உள்ளிட்டவற்றுக்கான வரி விதிப்பு தொடர்பாக இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் சீன பொருட்கள் மீதான வரியை அமெரிக்கா குறைத்துள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி சீன பொருட்கள் மீதான வரிவிதிப்பு 57 சதவீதத்தில் இருந்து 47 சதவீதமாக இறக்குமதி வரியைக் குறைத்துள்ளதாக இன்றைய சந்திப்பிற்குப் பிறகு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த சந்திப்பின் போது இரு தலைவர்களும் அனைத்து விவகாரங்கள் குறித்து அதில் ஆலோசிக்கப்படவில்லை என்றாலும் பல்வேறு முக்கிய முடிவுகள் என்பது இந்த ஆலோசனையின் பொழுது தங்களுக்கிடையே ஏற்பட்டுள்ளது என அதிபர் ட்ரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ட்ரம்ப் 2வது முறையாக அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, சீன அதிபர் ஜி ஜின் பிங்கை முதல் முறையாகச் சந்தித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது.
Follow Us