சமீபத்தில் பத்திரிகையாளர் நல வாரியத்திற்கு புதிதாக அலுவல்சாரா உறுப்பினர்களை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருந்தது.

Advertisment

இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று (12.8.2025) தலைமைச் செயலகத்தில், பத்திரிகையாளர் நல வாரியத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அலுவல்சாரா உறுப்பினர்கள் சந்தித்தனர்.

தினத்தந்தி குழுமத்தின் இயக்குநர் சிவந்தி ஆதித்யன் பாலசுப்பிரமணியன், தினகரன் / தமிழ் முரசு நாளிதழ் நிர்வாக ஆசிரியர் ஆர்.எம்.ஆர்.ரமேஷ், நக்கீரன் இதழ் ஆசிரியர் நக்கீரன் கோபால், தி இந்து நாளிதழ் துணை ஆசிரியர் பி. கோலப்பன், தி வீக் செய்தி வார இதழ் தலைமை செய்தியாளர் (சென்னை) திருமதி லெட்சுமி சுப்பிரமணியன், மாலை முரசு தொலைக்காட்சி முதன்மை ஆசிரியர் தம்பி தமிழரசன், தீக்கதிர் நாளிதழ் செய்தியாளர் எஸ். கவாஸ்கர், புதிய தலைமுறை தொலைக்காட்சி சிறப்பு நிருபர் எம். ரமேஷ், நியூஸ் 18 தொலைக்காட்சி தலைமை நிருபர் டி. தமிழரசி ஆகியோர் சந்தித்து, வாழ்த்து பெற்றனர்.

உடன், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், இ.ஆ.ப., செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் மரு.இரா. வைத்திநாதன், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் இருந்தனர்.