'Meera Mithun should roam the streets of Delhi; Mother's request' - Court orders action Photograph: (police)
பட்டியல் இனத்தவர்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் மீரா மிதுனை மீண்டும் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சமூக வலைத்தளத்தில் பட்டியல் இனத்தவர்களை அவதூறாக பேசி வீடியோ வெளியிட்ட நடிகை மீரா மிதுன் மற்றும் அவருடைய நண்பர் ஷாம் அபிஷேக் மீது மத்திய குற்றப்பிரிவு காவல்துறை கடந்த 2021 ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து கைது செய்திருந்தது. இதில் இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் வழக்கில் ஆஜராகாமல் இருவரும் தலைமறைவாகினர். தொடர்ந்து தலைமறைவாக உள்ள மீரா மிதுனை பிடிக்க பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மீரா மிதுனின் தாயார் சார்பில் மனுவானது தாக்கல் செய்யப்பட்டது. அதில் தன்னுடைய மகள் டெல்லி நகர வீதிகளில் சுற்றித் திரிகிறார். அவரை மீட்டுத் தர வேண்டும் எனத் தயார் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
சென்னை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு டெல்லியில் உள்ள சட்டப் பணிக்குழு ஆணையத்திடம் தகவல் தெரிவித்து டெல்லி போலீசாரால் மீரா மிதுன் கைது செய்யப்பட்டு அரசு காப்பகத்தில் வைக்கப்பட்டிருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, டெல்லி காப்பகத்தில் உள்ள மீதம் மிதுனை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து ஆகஸ்ட் 11ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தும்படி உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்துள்ளார்.