Meat shops banned today at Thiruvalluvar Day
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை நேற்று (15-01-26) உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த பண்டிகையை தொடர்ந்து இன்று (16-01-26) மாட்டுப் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. உழவர்களுக்கு நண்பனாக இருக்கும் மாடுகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இந்த தினத்தின் போதே திருக்குறளை எழுதிய திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக ‘திருவள்ளுவர் தினம்’ கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தையொட்டி, இன்று டாஸ்மாக் கடைகள் மற்றும் இறைச்சி கடைகள் மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியான அறிவிப்பில், ‘திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டில் இயங்கி வரும் அனைத்து டாஸ்மாக் கடைகள் இன்று மூடப்பட வேண்டும். இந்த உத்தரவை மீறி டாஸ்மாக் கடைகள் அல்லது மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், இன்று இறைச்சி விற்பனை செய்வதற்கு தடை செய்யப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow Us