உடல்நலக் குறைவு காரணமாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

Advertisment

உடல்நலக் குறைவு காரணமாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சளி மற்றும் இருமல் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். 

Advertisment

தற்போது வைகோவின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவ வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் நடைபெற்று வரும் சுய மரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழாவில் வைகோ பங்கேற்க இருந்தார். இந்நிலையில் அவருக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.