மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பேரறிஞர் அண்ணா 117-வது பிறந்தநாள் மாநாடு திருச்சி மாவட்டம் சிறுகனூரில் வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது. மாநாட்டிற்கான வேலையை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ எம்.பி ஆகியோர் தலைமையில் கழக நிர்வாகிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்நிலையில் மாநாட்டிற்கான கலந்தாய்வு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநாட்டுத் திடலில்ஜெனரேட்டர் உள்ளிட்ட மின் சாதனங்கள், ஒளி விளக்குகள், ஆம்புலன்ஸ், கழிப்பறை வசதி, கழிப்பறைக்குரிய தண்ணீர் வசதி, குடிநீர் வசதி, மேடையில் அமைய வேண்டிய வசதிகள், காவல்துறை, தீயணைப்புதுறை முன் அனுமதி பெறுதல், அவசர உதவிக்கு மருத்துவர்கள், புகைப்பட கண்காட்சி அமைய வேண்டிய இடங்கள் குறித்தும், மாநாட்டு திடலில் இரு திசைகளிலும் வாகனம் நிறுத்துமிடம் குறித்தும், வாகனங்களை ஒழுங்குபடுத்துவதற்கு வாக்கி டாக்கி வசதிகள், அணிகள் அமர வேண்டிய இடங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டு முடிவு எடுக்கப்பட்டது.